Published : 12 Jan 2020 07:26 PM
Last Updated : 12 Jan 2020 07:26 PM

சூர்யா - வெற்றிமாறன் இணையும் வாடிவாசல்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்துக்கு 'வாடிவாசல்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வெற்றிமாறனைப் பாராட்டினார்கள். ஆனால், அந்தப் படம் வெளியாகும் முன்பே, சூரி நாயகனாக அறிமுகமாகும் படத்தை இயக்க ஒப்பந்தமாகிவிட்டார் வெற்றிமாறன்.

ஆர்.எஸ்.இன்ஃபோடையின்மண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க வெளிநாட்டில் நடைபெறவுள்ளது. தற்போது இந்தப் படத்துக்குப் படப்பிடிப்பு இடங்கள் தேர்வு, நடிகர்கள் தேர்வு ஆகியவை நடைபெற்று வருகிறது.

சூரி படத்தைத் தொடர்ந்து, சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். 'அசுரன்' படத்தைத் தயாரித்த தாணு, சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி படத்தையும் தயாரிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுவிட்டார். சூர்யா - வெற்றிமாறன் - தாணு இணையும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்தப் படத்துக்கு 'வாடிவாசல்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக வெற்றிமாறன் விருது வழங்கும் விழா ஒன்றில் அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக, சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவல் உரிமையை வெற்றிமாறன் கைப்பற்றியிருந்தார். அதனைத் தான் சூர்யாவை வைத்து படமாக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x