Published : 05 Jan 2020 11:27 AM
Last Updated : 05 Jan 2020 11:27 AM

விருதுகளை அள்ளிய 'விஸ்வாசம்': ஜீ தமிழ் விருதுகள் வென்றவர்களின் முழுமையான பட்டியல்

ஜீ தமிழ் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் மக்களுக்கு விருப்பமான பட்டியலில் முக்கியமான விருதுகள் அனைத்தையும் 'விஸ்வாசம்' அள்ளியது.

ஜீ தமிழ் தொலைக்காட்சி முதன்முறையாக தமிழ் திரையுலகிற்கு என்று பிரத்யேகமாக விருது வழங்கும் விழாவைத் தொடங்கியுள்ளது. இந்த விழா நேற்று (ஜனவரி 4) பிரம்மாண்டமாகச் சென்னையில் நடைபெற்றது. கமல், இயக்குநர் ஷங்கர், லைகா சுபாஷ்கரன், தனுஷ், நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவினை அர்ச்சனா, தீபக், ஆர்.ஜே.விஜய் மற்றும் ஓவியா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். இதில் சிறந்த படம், சிறந்த நடிகர் என தொடங்கி பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றின் முழுமையான பட்டியல் இதோ:

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்: பெருமாள் செல்வம் (அசுரன்)

சிறந்த ஒளிப்பதிவாளர்: விஜய் கார்த்திக் (ஆடை)

சிறந்த குழந்தை நட்சத்திரம்: அஸ்வந்த் (சூப்பர் டீலக்ஸ்), சாதனா (பேரன்பு)

சிறந்த எடிட்டிங்: சத்யராஜ் நடராஜன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த கலை இயக்குநர்: விஜய் ஆதிநாதன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த அறிமுக இயக்குநர் : அருண்ராஜா காமராஜ் (கனா)

சிறந்த உறுதுணை நடிகர்: ஜார்ஜ் மரியான் (கைதி)

சிறந்த நடன இயக்குநர்: பிரபுதேவா (மாரி 2 - ரவுடி பேபி)

சிறந்த பாடலாசிரியர்: தாமரை (கண்ணான கண்ணே - விஸ்வாசம்)

சிறந்த அறிமுக நடிகை: லிஜோ மோல் ஜோஸ் (சிவப்பு மஞ்சள் பச்சை)

சிறந்த பின்னணி பாடகி: ஸ்ரேயா கோஷல் (அன்பே பேரன்பே - என்.ஜி.கே)

சிறந்த பின்னணி பாடகி (நடுவர் தேர்வு): பத்மப்ரியா (ஐரா - மேகதூதும்)

இந்திய இசையின் பெருமை: ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த பின்னணி பாடகர்: சித் ஸ்ரீராம் (கண்ணான கண்ணே - விஸ்வாசம்)

சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (பேட்ட)

சிறந்த கதை: ராம் (பேரன்பு)

சிறந்த திரைக்கதை: பார்த்திபன் (ஒத்த செருப்பு சைஸ் 7)

இந்திய சினிமாவின் பெருமை: கமல்ஹாசன்

பிடித்த இயக்குநர்: லோகேஷ் கனகராஜ் (கைதி)

இந்திய சினிமாவில் சிறந்து விளங்குவதற்காக கே.பாலசந்தர் விருது: இயக்குநர் ஷங்கர்

சிறந்த அறிமுக நடிகர்: துருவ் விக்ரம் (ஆதித்ய வர்மா)

சிறந்த இயக்குநர்: வெற்றி மாறன் (அசுரன்)

சிறந்த நடிகை (நடுவர் தேர்வு) - சமந்தா

சமூகப் பொறுப்புள்ள நடிகர் - விஜய் சேதுபதி

சிறந்த நடிகை: ஐஸ்வர்யா ராஜேஷ் (கனா)

மக்களுக்கு விருப்பமான நடிகை: நயன்தாரா (விஸ்வாசம், பிகில்)

சிறந்த வில்லன்: அர்ஜுன் தாஸ் (கைதி)

சிறந்த நடிகர்: தனுஷ் (அசுரன்)

இந்திய சினிமாவில் பெண்களுக்கு உத்வேகம் அளித்ததற்காக ஸ்ரீதேவி விருது: நயன்தாரா

கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் நம்பிக்கையுடன் செயல்பட்டவர்: அஜித்

மக்கள் விருப்பமான இசையமைப்பாளர்: இமான் (விஸ்வாசம், நம்ம வீட்டுப் பிள்ளை)

மக்களுக்கு விருப்பமான பாடல்: கண்ணான கண்ணே - விஸ்வாசம்

மக்களுக்கு விருப்பமான படம்: விஸ்வாசம்

சிறந்த உறுதுணை நடிகை: ரம்யா கிருஷ்ணன் (சூப்பர் டீலக்ஸ்)

சிறந்த காமெடி நடிகர்: யோகி பாபு (கோமாளி)

சிறந்த உறுதுணை நடிகை - அஞ்சலி (பேரன்பு)

சிறந்த படம் - பேரன்பு

சிறந்த பின்னணி இசை - ஜி.வி.பிரகாஷ் (அசுரன்)

சிறந்த சண்டை இயக்குநர் - அன்பறிவ் (கைதி)

சிறந்த ஒப்பனை கலைஞர் - பானு (பேட்ட)

சிறந்த கண்டுபிடிப்பு - கென் கருணாஸ் (அசுரன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x