Published : 31 Dec 2019 07:44 PM
Last Updated : 31 Dec 2019 07:44 PM

முதல் பால் சிக்ஸ்: 'மாஸ்டர்' ஃபர்ஸ்ட் லுக் குறித்து இயக்குநர் ரத்னகுமார்

'மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து இயக்குநர் ரத்னகுமார் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்துக்கு 'மாஸ்டர்' எனத் தலைப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்புக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ள இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பதிவில், "தளபதி 64, சிக்ஸும், ஃபோருமா இருக்கும். இதுதான் முதல் பால் சிக்ஸ். மாஸ்டர் முதல் பார்வை. தளபதி போஸ்டரில் என் பெயரைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. மீண்டும் நன்றி மச்சி லோகேஷ். எப்பவும் போல கலக்கிவிட்டீர்கள் கோபி பிரசன்னா” என்று தெரிவித்துள்ளார்

’மாஸ்டர்’ படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x