Published : 31 Dec 2019 04:06 PM
Last Updated : 31 Dec 2019 04:06 PM

என் வலிமையின் தூண்கள்: தனுஷ் நெகிழ்ச்சி

என் வலிமையின் தூண்கள் என் ரசிகர்கள்தான் என தனுஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு 'அசுரன்' என்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்த சந்தோஷத்தில் இருக்கிறார் தனுஷ். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை தாணு தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியால், தற்போது பல்வேறு மொழிகளில் இதன் ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த தனுஷ், தனது ட்விட்டர் பதிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள். இந்தப் புது வருடமும், தசாப்தமும் உங்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும். கடந்த தசாப்தம் எனக்கு மிகவும் விசேஷமானதாக இருந்தது. என்னை நீங்கள் ஆதரித்ததற்கும், ஊக்குவித்ததற்கும், முக்கியமாக எனது பயணத்தின் முக்கியமான பங்காக இருந்ததற்கும் நான் கூறும் நன்றி போதாது. எதிர்கொண்ட சவால்களையும், தடைகளையும் நான் புன்னகையுடன் சந்தித்ததற்கான காரணம் நீங்கள்தான். என் வலிமையின் தூண்கள். என் ரசிகர்கள்.

இந்த தசாப்தம் தேசிய விருதுடன் தொடங்கியது, எனது இயக்கத்தில் முதல் படம், அசுரனுடன் முடிந்தது. இந்தப் பயணத்தில் என் இதயத்துக்கும் உங்கள் இதயத்துக்கும் நெருக்கமான இன்னும் நிறைய படங்கள் இருந்தன. ஒரு நடிகராக இதை விடச் சிறப்பான 10 வருடங்களை நான் எதிர்பார்த்திருக்க முடியாது. கடவுள் கருணை புரிந்திருக்கிறார். நீங்களும்தான். மீண்டும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. இன்னும் இன்னும் கடுமையாக உழைத்து உங்களைப் பெருமைப்படுத்துவேன்''.

இவ்வாறு தனுஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x