Published : 30 Dec 2019 06:50 PM
Last Updated : 30 Dec 2019 06:50 PM

எங்கள் தளத்தில் அஜித், விஜய், சூர்யா ரசிகர்களின் வீச்சு: ட்விட்டர் இந்தியா 

தங்களது தளத்தில் அஜித், விஜய், சூர்யா ரசிகர்களின் வீச்சு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ட்விட்டர் இந்தியா சார்பாக அளித்துள்ள பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்போது, அவர்களது ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் கொண்டாடித் தீர்ப்பார்கள். சென்னை, இந்தியா ட்ரெண்டிங் என்பதைத் தாண்டி இப்போது உலகளாவிய ட்ரெண்டிங் வரை சென்றுவிட்டார்கள்.

இப்போது கூட யாருடைய படம் இந்த ஆண்டு அதிக வசூல் என்பதில் அஜித் - விஜய் ரசிகர்களுக்கு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதனிடையே 2019-ம் ஆண்டின் ட்விட்டர் ட்ரெண்டிங், தமிழ் சினிமாவில் ட்விட்டர் தளத்தின் பங்கு, ஹேஷ்டேகுகள் உள்ளிட்டவை தொடர்பாக ட்விட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோ, ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியொன்றை அளித்துள்ளார்.

இந்தப் பேட்டியில், "மற்ற மொழி சினிமாவை ஒப்பிடும்போது தமிழ் சினிமாவின் வீச்சு ட்விட்டரில் எப்படியிருக்கிறது?" என்ற கேள்விக்கு செரில் ஆன் கூட்டோ பதில் அளித்தார். அவர் கூறுகையில், "தென்னிந்தியத் திரைப்படங்கள், குறிப்பாகத் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் விஸ்வாசமான ரசிகர்களிடையே நிறைய உரையாடல்களை உருவாக்குகிறது. கடந்த சில வருடங்களாக அதிகம் ட்வீட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் பட்டியலில் தமிழ் - தெலுங்குப் படங்கள் இருப்பது இதற்கு ஓர் உதாரணம்

2017-ல் ‘மெர்சல்’ பற்றி ஒரே நாளில் 10 லட்சம் ட்வீட்டுகளைக் கடந்து அந்த வருடத்தின் உச்ச ஹேஷ்டேக் என்ற பெருமையைப் பெற்றது. ‘பாகுபலி 2’, ’விவேகம்’, ’ஸ்பைடர்’ போன்ற படங்கள் சில சாதனைகளை முறியடித்தன. பிக்பாஸ் தமிழ் பற்றியும் அதிக உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன.

2017-ல் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இரண்டாவது பார்வை போஸ்டரை சூர்யா வெளியிட்டது தான் அந்த வருடம் இந்தியாவில் அதிகம் ரீ ட்வீட் செய்யப்பட்ட ட்வீட். 2018-ல் ’சர்கார்’ அதன் அரசியல் கதையால் நிறைய உரையாடல்களை உருவாக்கியது. அதிக தாக்கம் ஏற்படுத்திய தருணம் என்ற பட்டியலில் இடம் பெற்றது.

‘விஸ்வாசம்’, ’பரத் அநே நேனு’, ’அரவிந்த சாமிதா', ’ரங்கஸ்தலம்’, ’காலா’ மற்றும் பிக் பாஸ் தெலுங்கு 2 பற்றியும் உரையாடல்கள் நிகழ்ந்தன. இந்த வருடம் ’பிகில்’ படத்தைப் பற்றி அதிகம் பேர் பேசியுள்ளார்கள். படம் வெளியான பத்து நாட்களில் படத்தைப் பற்றி 60 லட்சம் ட்வீட்டுகள் பதிவிடப்பட்டுள்ளன” என்று செரில் ஆன் கூட்டோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x