Published : 30 Dec 2019 06:53 PM
Last Updated : 30 Dec 2019 06:53 PM

'தர்பார்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'தர்பார்' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டாலும், எந்தத் தேதியில் வெளியீடு என்பதைப் படக்குழு அறிவிக்காமலேயே பணிகளைக் கவனித்து வந்தது. தற்போது 'தர்பார்' திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

'தர்பார்' படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, ப்ரதீக் பார்பர், யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனம் தங்களது 'தர்பார்' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்த உடன், மலேசிய நிறுவனம் வெளியீட்டுக்குத் தடை கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x