Published : 30 Dec 2019 10:48 AM
Last Updated : 30 Dec 2019 10:48 AM

பிரபல தொகுப்பாளினி திவ்யாவுக்குத் திருமணம்; காதலரைக் கரம் பிடித்தார்

பல்வேறு முன்னணித் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த திவ்யாவுக்கு டிசம்பர் 27-ம் தேதி திருமணம் நடந்தது.

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பிரபலமானவர் திவ்யா. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மட்டுமன்றி, இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியைத் தொடர்ந்து புதுயுகம் தொலைக்காட்சியில் 'நட்சத்திர ஜன்னல்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.

மேலும், விஜய் நடித்த 'வில்லு' படத்தில் 'தீம்தனக்கா தில்லானா' பாடலின் மூலம் பாடகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சில பாடல்களையும் பாடியுள்ளார். பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆகியவற்றைத் தொடர்ந்து தனியாக ஆடை தொடர்பான வியாபாரமும் செய்து வந்தார்.

இதனால், சமீபமாக திவ்யா எந்தவொரு நிகழ்ச்சியிலும் தலைகாட்டாமல் இருந்தார். கடந்த டிசம்பர் 27-ம் தேதி இவருக்கும், ஷிபு தரகன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் பாடகர்கள் ஹரிசரண், விஜய் யேசுதாஸ், நரேஷ் ஐயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாடகர் ஹரிசரண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் திவ்யாவின் திருமணப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து திவ்யாவுக்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

திவ்யாவின் நீண்ட கால நண்பர், காதலர் ஷிபு என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x