Published : 29 Dec 2019 12:00 PM
Last Updated : 29 Dec 2019 12:00 PM

எப்போதாவது அஜித்தை தொடர்பு கொண்டோமா? - ட்விட்டர் இந்தியா விளக்கம்

அஜித் ட்விட்டர் தளத்துக்கு வரவேண்டும் என்று ட்விட்டர் இந்தியா சார்பில் அளிக்கப்பட்ட பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் தளத்தில் விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையேயான போட்டி அவ்வப்போது தலைதூக்கும். இதனை இந்தியளவில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்குகளை வைத்து அறிந்து கொள்ளலாம். ஆனால், விஜய் - அஜித் இருவருமே ட்விட்டர் தளத்தில் இல்லை.

விஜய் தரப்பிலிருந்து அவருடைய அலுவலகம் சார்ந்து ஒரு ட்விட்டர் கணக்கு இயங்கி வருகிறது. அதில் ரசிகர்களோடு கலந்துரையாடியுள்ளார் விஜய். ஆனால், சமீபமாக அதிலிருந்தும் கலந்துரையாடுவதை நிறுத்துவிட்டார். தன் படங்களின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர்கள் உள்ளிட்டவை மட்டுமே அந்தக் கணக்கில் பகிரப்பட்டு வருகிறது.

அஜித் தரப்பில் ட்விட்டர் கணக்கு எதுவுமே கிடையாது. ஆனால், அவருடைய ரசிகர்கள் தான் ட்விட்டர் தளத்தை ஆட்கொண்டுள்ளனர். அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர்கள் என வரும் போது கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.

தற்போது 2019-ம் ஆண்டின் ட்விட்டர் ட்ரெண்டிங், தமிழ் சினிமாவில் ட்விட்டர் தளத்தின் பங்கு, ஹேஷ்டேக்குகள் உள்ளிட்டவைத் தொடர்பாக ட்விட்டர் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் மேனேஜர் செரில் ஆன் கூட்டோ, ’தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியொன்றை அளித்துள்ளார்.

அதில், "நடிகர் அஜித் சமூக வலைதளங்களிலோ ட்விட்டரிலோ இல்லை, ஆனால் அவருடைய #தல ஹேஷ்டேக் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ட்விட்டர் இந்தியா எப்போதாவது அவரை தொடர்பு கொண்டார்களா?” என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு செரில் ஆன் கூட்டோ, "அஜித் ட்விட்டருக்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக அவரது ரசிகர்கள் அவரது படங்களையும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வதையும் எந்த அளவுக்கு விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்" என்று பதிலளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x