Published : 29 Dec 2019 11:49 AM
Last Updated : 29 Dec 2019 11:49 AM

ராஷ்மிகாவுக்கு நன்றி சொன்ன ஹ்ரித்திக் ரோஷன்

'வார்' படத்தின் பாடலுக்கு நடனமாடிப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனாவுக்கு ஹ்ரித்திக் ரோஷன் நன்றி தெரிவித்துள்ளார்.

வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின், ராஷ்மிகா மந்தனா, ஆனந்த் நாக், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஷ்மா'. சித்தாரா எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பிப்ரவரி 21, 2020-ல் வெளியாகவுள்ளது. தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக, இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'வார்' படம் படமாக்கப்பட்ட இடத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அந்த இடத்தில் வைத்து நிதின், ராஷ்மிகா இருவரும் 'வார்' படத்தில் பிரபலமான 'குன்கூரோ' பாடலுக்கு ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் வாணி கபூர் மாதிரியே நடனமாடி ட்விட்டரில் பகிர்ந்தனர். அதில் ஹ்ரித்திக் ரோஷனின் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்த வீடியோ பகிர்வு தொடர்பாக ஹ்ரித்திக் ரோஷன், "அருமை. ராஷ்மிகா மற்றும் நிதின் இருவரும் நன்றி. உங்களுடைய பீஷ்மா படத்துக்கு என் வாழ்த்துகள்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர்.

ஹ்ரித்திக் ரோஷனின் பதிலுக்கு ராஷ்மிகா மந்தனா, "உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களை ஒரு நாள் சந்தித்து, இந்த நடன அமைப்பை உங்களுடன் ஆட காத்திருக்கிறேன் சார்" என்று பதிலளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x