Published : 28 Dec 2019 07:04 PM
Last Updated : 28 Dec 2019 07:04 PM

‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்: அதிகாரபூர்வ அறிவிப்பு

‘தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 64’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ, இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், ஸ்ரீமன், சஞ்சய், வி.ஜே. ரம்யா, கெளரி கிஷன், சாந்தனு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு தற்போது ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது. விஜய் - விஜய் சேதுபதி - மாளவிகா மோகனன் மூவரும் சம்பந்தப்பட்டக் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. தற்போதைய ஷெட்யூலில் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டு விஜய் சென்னை வந்துவிட, அவர் இல்லாத காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

அதை முடித்ததும், இன்னும் சில நாட்களில் சென்னை திரும்புகிறது படக்குழு. புத்தாண்டு முடிந்ததும், சென்னையில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட அரங்கில் விஜய் - விஜய் சேதுபதிக்கு இடையேயான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் வருகிற 31-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

ஜனவரி இறுதிக்குள் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடத் திட்டமிட்டு, மும்முரமாகப் பணியாற்றி வருகிறது படக்குழு. ஏப்ரல் மாதம் படம் வெளியாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x