Published : 28 Dec 2019 10:55 AM
Last Updated : 28 Dec 2019 10:55 AM

'ராஜபீமா' அப்டேட்: சிறப்புத் தோற்றத்தில் ஓவியா, யாஷிகா

ஆரவ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராஜபீமா' படத்தில், முக்கியக் கதாபாத்திரங்களில் ஓவியா மற்றும் யாஷிகா நடித்துள்ளனர்.

'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தைத் தொடர்ந்து ஆரவ் நாயகனாக நடித்துள்ள படம் 'ராஜபீமா'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருக்கிறது படக்குழு.

நரேஷ் சம்பத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் நாயகியாக ஆஷிமா நர்வால் நடித்துள்ளார். நாசர், சாயாஜி ஷிண்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்தும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

யானைக்கும் கதாநாயகனுக்கும் உள்ள உறவை, அன்பைச் சொல்லும் படமாக ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி, கமர்ஷியல் களமாக இப்படம் வெளிவர உள்ளது. இதில், பத்திரிகையாளராக யாஷிகா ஆனந்தும், சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ள மற்றொரு சிறிய கதாபாத்திரத்தில் ஓவியாவும் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

சைமன் கே கிங் இசையில், இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. இதர பாடல்களின் வெளியீடு விரைவில் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்தனர். தற்போது படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x