Published : 27 Dec 2019 05:00 PM
Last Updated : 27 Dec 2019 05:00 PM

பாலிவுட் பிரபலங்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று தனது தனது 54 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

பாலிவுட்டில் வெற்றிகரமான நடிகர்களாக வலம் வருபவர்களில் ஒருவரான நடிகர் சல்மான் தனது 54 வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். பிறந்த நாள் விழாவில் சக பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான் சோனாக்‌ஷி சின்கா, கத்ரீனா கைஃப், தபு, ஆதித்ய ராய் கபூர் உள்ளிட்ட பலருடன் வெற்றிக்கரமாக கொண்டாடி உள்ளார்.

சமூக வலைதளங்களில் பிரபலங்கள் சல்மான் கானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் சல்மான் கானின் ரசிகர்கள் ட்விட்டரில் #HappyBirthdaySalmanKhan என்ற ஹாஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்ட் செய்தனர்.

பிரபுதேவா - சல்மான் கான் கூட்டணியில் படம் 'தபங் 3' திரைப்படம் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.

இதனிடையே, பிரபுதேவா - சல்மான் கான் கூட்டணி தங்களுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாகப் பணிபுரிந்து வருகிறது. 'ராதே' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக திஷா பதானி நடித்து வருகிறார் சல்மான் கான், சோகைல் கான் மற்றும் அதுல் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x