Published : 27 Dec 2019 07:28 AM
Last Updated : 27 Dec 2019 07:28 AM

நகைச்சுவையில் டிவி தொடரிலும் சாதிக்க முடியும்!- திவாகரின் காமெடி தர்பார்

மஹா

விஜய் டிவியின் ‘சிரிச்சா போச்சு’ காமெடி நிகழ்ச்சி வழியே சிரிக்க வைத்து வந்த திவாகர் இப்போது ஜீ தமிழ் சேனலில் ‘பூவே பூச்சூடவா’, ‘ரெட்டை ரோஜா’ தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்து வருகிறார். அவருடன் பேசியதில் இருந்து..

சினிமா போல சீரியல்களிலும் காமெடிக்கு தனி முக்கியத்துவம் அளிக்கும் சூழல் இப்போ பெருகிட் டிருக்கே. இந்த அமைப்பை ஏன் மிஸ் பண்ணனும்னுதான் உள்ளே வந்தேன். சீரியல் பக்கம் வந்து மூணு, நாலு வருஷங்கள் ஓடிச்சு. ‘சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சியில் ஒரு குழுவோடு சேர்ந்து பணி செய் தோம்.

இங்கே சோலோவாக ஏதா வது செய்வோம்னு வந்தேன். என் நேரம் நல்ல நேரம். பெரிய அளவில் ரீச் ஆகிட்டிருக்கோம்.

சினிமாபோல சீரியல்களிலும் ஹீரோவுக்கு நண்பன் என்கிற டிராக் ஓபன் ஆயாச்சு. அதுவழியாகவும் நாம ஸ்கோர் செய்யலாம். டைமிங் காமெடியில் இருந்து சமூக விஷயங்களை கலந்து கொடுக்கும் அளவுக்கு இன்றைக்கு ஸ்கோப் இருக்கு. ‘பூவே பூச்சூடவா’ சீரியலில் ரன்பீர் என்ற கதாபாத் திரம். ஹீரோ தினேஷுக்கு உதவியா ளர் மாதிரி வருகிறேன். ‘ரெட்டை ரோஜா’ சீரியலில் ‘காளி’ என்ற நேர் எதிர்மாறான ரோல். ரஜினி ஸ்டைல்ல சொல்லணும்னா ரெண் டுமே காமெடியில ‘சும்மா கிழி’ டைப்தான்.

‘சிரிச்சா போச்சு’ நிகழ்ச்சியில் நான், அமுதவாணன், பழநி பட்டா ளம், ஜெயச்சந்திரன், தீபன், தங்க துரை என ஒரு பெரிய குழுவே சேர்ந்து பணி செய்தோம். நமக்கென தனியே ஏதாவது ஸ்கோர் செய்ய முடியும்னு நிரூபிக்கும் களமாக இது உள்ளது. இதிலும் ஒரு ஓட்டம் ஓடிட்டு வந்துடுவோம்னுதான் இங்கே வந்தேன்.

நான் பக்கா சென்னை பையன். நமக்கு தெரிஞ்சதெல்லாம் நகைச் சுவை உணர்வை வெளிப்படுத் துவதுதான். புதுக் கல்லூரியில தான் படிச்சேன். ‘திவாகர் நம்ம கல்லூரி மாணவன்’ என்று இப்ப வும் அங்கு எனக்கு ஒரு பெருமை யான இடம் இருக்கு. அதுபோன்ற சந்தோஷங்களோடு, நாம் செய் யும் காமெடி சேட்டைகளை அங்கீ கரித்து விருது கிடைக்கும்போது இன்னும் சந்தோஷமா இருக்கும். ‘பூவே பூச்சூடவா’ சீரியல் காமெடிக் காக சிறந்த ஜீ குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த காமெடியன் விருது வாங்கி இருக்கிறேன்.

‘காக்கி சட்டை’, ‘ஜாக்பாட்’ என சினிமாவில் நல்ல நல்ல கதாபாத்திரங்கள் அவ்வப்போது அமையுது.

அடுத்து ஜோதிகா நடிப்பில் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் வழக்கறிஞர் கதா பாத்திரத்தில் நடிச்சிருக்கேன். இப்போ அடுத்ததா ரெண்டு, மூணு படங்கள் வரிசையா இருக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x