Published : 24 Dec 2019 07:59 AM
Last Updated : 24 Dec 2019 07:59 AM

திரை விமர்சனம்- தம்பி

தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி யான மேட்டுப்பாளையத்தில் மனைவி (சீதா), மகள் (ஜோதிகா), வயதான மாமியார் ஆகியோருடன் வசிக்கிறார் அப்பகுதி எம்எல்ஏ ஞானமூர்த்தி (சத்யராஜ்). 15 ஆண்டு களுக்கு முன்பு காணாமல்போன மகன் சரவணனை நினைத்து இந்த குடும்பமே வாடிக் கொண்டிருக் கிறது. அப்போது, கோவாவில் சுற்றுலா வழிகாட்டியாக ‘விக்கி’ என்ற பெயரில் தன் மகன் வாழ் வதை அறிகிறார் ஞானமூர்த்தி. உடனே மகனை (கார்த்தி) வீட் டுக்கு அழைத்து வருகிறார். ஆனால், அது உண்மையான சரவணன் அல்ல. பணத்துக்காக ஞானமூர்த்தியின் மகன்போல நடிக் கிறான். ஆனால், அப்படி நடிப்பதும் அவனுக்கு சுலபமாக இருக்க வில்லை. ஒரு மகனாக, தம்பியாக நடிக்கும் நாடகத்தில் போலி சர வணன் சந்திக்கும் எதிர்பாராத காட்சி கள் என்ன? அவரை அந்த குடும்பம் வாரிசாக ஏற்றுக்கொண்டதா? காணாமல்போன உண்மையான தம்பி திரும்பி வந்தானா, இல் லையா என்பது மீதிக் கதை.

தம்பியாக நடித்து, முடிந்த வரை திருடிக்கொண்டு சென்றுவிடலாம் என்று நினைத்தவன், ஒரு கட்டத் தில் துப்பறிவாளனாக மாறவேண் டிய கட்டாயத்தை உருவாக்கும் திரைக்கதை. கதைக் கருவில் ‘திரிஷ்யம்’ படத்தின் சாயல் இருந் தாலும், அதை இறுதிவரை ஊகிக்க முடியாதபடி ‘பஸில்’ பொருத்தி விளையாடுவது போன்ற அசரடிக் கும் திரைக்கதையால் கடைசி காட்சிவரை ஈர்க்கிறார் இயக்குநர் ஜித்து ஜோசப்.

கதாபாத்திரங்களின் ‘சுயநலம்’, திரைக்கதையின் முக்கிய அம்ச மாக வசீகரிக்கிறது. சில காட்சி களே வந்து செல்லும் கதாநாயகிக் கும் திரைக்கதையின் முக்கிய திருப்பங்களில் பங்கு இருக்கிறது. அப்பா, அம்மா, அக்கா கதாபாத் திரங்களின் நடுவில் வந்து விழும் போலித் தம்பி கதாபாத்திரத்திடம் ஏற்படும் திடீர் மாற்றம், திரைக் கதையின் விறுவிறுப்பான ஓட்டத் துக்கு முக்கிய எரிபொருளாக பங்காற்றுகிறது.

ஒரு திரில்லர் திரைப்படம் காட்சி யாக்கம் பெறும்போது, கதாபாத் திரங்களின் வாழிடமும், அங்குள்ள நிலப்பரப்பும், சுற்றுச்சூழலும் மர் மத்தைக் கூட்ட உதவ வேண்டும். அது இப்படத்துக்கு நன்றாகவே அமைந்திருக்கிறது.

நட்சத்திரத் தேர்வுக்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். திருட் டுத்தனமும், அப்பாவித்தனமும் கலந்த முகபாவத்துடன் சரவண னாக நடித்துள்ள கார்த்திக்கு வலிந்து சண்டைக் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் பேச்சுக் கொடுத்தே, கதையின் மர்மத்தை விடுவிக்க, கலகலப்பையும், தவிப் பையும் கலந்து சரவணனாக நடித்து அசரடிக்கிறார் கார்த்தி.

மனதுக்குள் பாசத்தை அடக்கி வைத்துக்கொண்டு, இறுக்கமான மனதுடன் தம்பியை அணுகும் அக்கா பார்வதியாக ‘அசால்ட்’ நடிப்பில் ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா. சத்யராஜுக்கு அமைந்த ‘நறுக் சுருக்’ கதாபாத்திரங்கள் வரிசையில் ஞானமூர்த்தியையும் சேர்த்துக்கொள்ளலாம். வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டு, 15 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்து சிரிக்கும் அந்த ஒரு சிரிப்பே அவரது நடிப்பாளுமைக்கு உதாரணம்.

இந்த 3 முதன்மையான கதா பாத்திரங்களுக்கு அப்பால், இள வரசு, சீதா, நிகிலா விமல், பாலா, சவுகார் ஜானகி, ஹரிஷ் பெராடி, அன்சன் பால், அம்மு அபிராமி என அனைவருமே கதா பாத்திரங்களுக்கு தேவையான நடிப்பைத் தந்துள்ளனர்.

கார்த்தியின் பால்ய நண்பனாக வரும் காவல் துறை அதிகாரியின் பகுதிகள் திரைக்கதையில் ஒட்ட வைத்தது போல் உள்ளன. கோவா வில் வெளிநாட்டு சுற்றுலா பயணி களை கார்த்தி ஏமாற்றுவது, ஹரிஷ் பெராடியின் வன்மம் ஆகிய காட்சிகளில் வரும் திருப்பங்கள் எளிதில் ஊகிக்கும்படி இருக் கின்றன. அதேபோல, சிறிய மலைக் கிராமம் ஒன்றில் இருக்கும் மிகக் குறைந்த வாக்குகளுக்காக எம்எல்ஏ பெரிய திட்டம் தீட்டுவது, நல்ல நண்பனாக இருக்கும் பாலா, ரிஸார்ட் கட்டுவதற்குத் துணை போவது போன்றவை, சஸ் பென்ஸை கூட்ட வலிந்து உருவாக் கப்பட்ட பலவீனத்துடன் காட்சி அளிக்கின்றன.

சின்மயி குரலில் ஒலிக்கும் ‘தாலேலோ’, மனதை வருடும் பாடல். ஒரு திரில்லர் படத்துக்கு தேவையான அழுத்தமும், தாக்க மும் பின்னணி இசையில் சிறிதும் இல்லை. இசையில் கோவிந்த் வசந்தா கோட்டை விட்டாலும், ஒளிப் பதிவில் கோட்டை கட்டியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.

‘ஒரு அக்கா, ரெண்டு அம்மா வுக்கு சமம்’, ‘பசியைக்கூட தாங் கிடலாம், தனிமையைத்தான் தாங் கிக்க முடியாது’, ‘கூடப்பொறந்தா மட்டும் தம்பியாகிட முடியாது’, ‘ஒரு குடும்பம் கலைஞ்சுடாமப் பார்த்துக்கிறதுக்காக என்னவெல் லாம் செய்ய வேண்டியிருக்கு’ என மணிகண்டனின் உணர்வுப் பூர்வமான வசனங்கள் படத்துக்கு பக்கபலம்.

இவன், குடும்பத்தினர் அனை வருக்கும் பிடிக்கக்கூடிய செல்ல மான ‘தம்பி’!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x