Published : 22 Dec 2019 07:37 AM
Last Updated : 22 Dec 2019 07:37 AM

திரை விமர்சனம் - ஹீரோ

போலி கல்விச் சான்றிதழ்கள் தயா ரிப்பது, தனியார் கல்லூரி களில் சீட் வாங்கித் தருவது என்பது போன்ற எசகுபிசகான தரகு வேலைகளை செய்பவர் சக்தி (சிவகார்த்திகேயன்). அவரது பக்கத்து வீட்டுப் பெண்ணான மதி (இவானா) ஏழை குடும்பத்துப் பெண். ஏரோநாட்டி கல் இன்ஜினீயரிங் படிக்க விரும்பும் அவளுக்கு, தனக்குத் தெரிந்த கல்லூரி களில் சீட் கேட்டு ஏமாந்துபோகிறார். இதற்கிடையே மதி படித்த பள்ளிக்கு வரும் சக்தி, அவளது ஆசிரியர் ‘மாஸ் டர்’ மூர்த்தியை சந்திப்பதுடன், அது எப் படிப்பட்ட பள்ளி என்பதை தெரிந்து கொள்கிறார். அங்கு படித்து, மதி கண்டு பிடித்த ‘உப்புத் தண்ணீரில் இயங்கும்’ இன்ஜினை காட்டி ஒரு கல்லூரியில் அவ ளுக்கு அட்மிஷன் வாங்குகிறார் சக்தி. ஆனால், அந்த கண்டுபிடிப்புக்கு ஏற் கெனவே காப்புரிமை பதிவுசெய்து வைத் திருப்பதாக கூறி, கார்ப்பரேட் தரகரான மகாதேவ் (அபய் தியோல்) மாணவி மதி மீது வழக்கு தொடுக்கிறார். இதில் பாதகமான தீர்ப்பு வர, தற்கொலை செய்துகொள்கிறார் மதி. அவரை காப் பாற்ற முடியாமல் தவிக்கும் சக்தி, ‘மாஸ்டர்’ மூர்த்தியின் பள்ளியையும், அவர் உருவாக்கிய மாணவர்களையும், அவர்களது கண்டுபிடிப்புகளையும் காப் பாற்ற எப்படிப்பட்ட ஹீரோ அவதாரம் எடுத்தார் என்பது கதை.

தனது அறிமுகப் படமான ‘இரும் புத்திரை’ மூலம் டிஜிட்டல் மோசடிகளை அம்பலப்படுத்திய இயக்குநர் பி.எஸ். மித்ரன், இதில் இந்தியக் கல்விமுறை யின் போதாமையை பேசுகிறார். இன் றைய கல்விமுறை, பெருமுதலாளி களுக்கான படித்த பணியாளர்களை உருவாக்குகிறதே தவிர, சுயசிந்தனை, கற்பனைத் திறன், நன்னெறிகள் போன்ற விழுமியங்கள் கொண்ட முழு மனிதர் களை உருவாக்கத் தவறிவிடுகிறது. ‘உன் வேலையைப் பார்.. எதைப் பற்றியும் கேள்வி கேட்காதே’ என்ற மனநிலையையே ஊக்குவிக்கிறது என்பதை வசனங்களின் துணையுடன் விரிவாகப் பேசியிருக்கிறார்.

தனியார் கல்லூரிகளில் பணத்தை கொட்டிக் கொடுத்து கல்வியைப் பெற்று, மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகளாகும் பலரும், தாங்கள் செலவழித்த பணத்தை திருப்பி எடுக்க கார்ப்பரேட்களின் லாப நோக்கத்துக்கு முகவர்களாக இருப்பதையும் படம் கச்சிதமாக பதிவு செய்கிறது. கல்வித் துறையின் போதாமைகளை தீர்க்க ‘சூப்பர் ஹீரோ’தான் வேண்டும் என்று கூறும் படம், அந்த சூப்பர் ஹீரோவுக்கு முன்வைத்த வரையறையும், அதை பயன்படுத்திய விதமும் ஈர்க்கின்றன.

ஆனால், திரைக்கதையில் சூப்பர் ஹீரோவை கட்டமைக்க, உந்துசக்தியாக இருக்கும் ‘மாஸ்டர்’ மூர்த்தியின் கதா பாத்திரம் முழுமையின்றி இருக்கிறது. அவர் நடத்தும் பள்ளி தலைமறைவாக செயல்படுவதாகக் காட்டுவது, அவரது மாணவர்கள் வெளிநாடுகளில் நல்ல நிலைமையில் இருப்பது போன்ற பலவீன மான சித்தரிப்புகளின் பின்னால் இருக்கும் தர்க்க, நியாயங்கள் பற்றி இயக்குநர் மருந்துக்கும் கவலைப்பட்டதாக தெரிய வில்லை. தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்த மூர்த்தியின் மாணவி தற் கொலை செய்துகொள்வதே பெரும் பிழையாக உறுத்துகிறது.

திரைக்கதையில் ஓட்டைகள் ஏகத்துக் கும் மலிந்திருக்கின்றன. ஆனால், இதைப் பற்றி கவலைப்படாமல் படத்தை ரசிக்க வைக்கின்றன ஈர்ப்பும், கூர்மையும் மிக்க வசனங்கள். ‘எங்க வாத்தியார் எல்லாம் படிக்கத்தான் சொன்னாங்க. கத்துக்கோன்னு சொன்னதே இல்ல’, ‘நீ ஐடியாவை விக்கிற.. நான் விதைக் கிறேன்’, ‘உங்க பிள்ளைகளோட திறமை அவர்களுடைய ரஃப் நோட்டில் இருக்கு’ என்பது போன்ற வசனங்கள் படத்தின் பிரதான அக்கறையைக் கூர்மையாக எடுத்துச் சொல்கின்றன.

மதி உயிருக்குப் போராடும்போது, மருத்துவமனையின் ‘கார்ப்பரேட் ரேட்டிங்’ காப்பாற்றப்பட வேண்டும் என் பதற்காக வேண்டுமென்றே புறக்கணித்து, அவரை உயிரிழக்கச் செய்வது, ‘தங்கள் வாழ்விடத் தேவைக்காக மாணவர்கள் உருவாக்கிய கண்டுபிடிப்புகள், இங்கு வாழும் மக்களுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, இன்னொரு நாட்டுக்கு அல்ல’ என நாயகன் சொல்வது ஆகி யவை ‘அடேங்கப்பா’ மொமென்ட்!

இவற்றைத் தாண்டி, கதைக்குள் பொருந்தாத நாயகனின் காதல், கரு வேப்பிலைபோல பயன்படுத்திப் பட் டுள்ள கதாநாயகி கதாபாத்திரம் போன் றவை திரைக்கதையின் கூர் மையை மழுங்கச் செய்கின்றன.

மோசடியில் ஈடுபட்டு, பிறகு திருந்தும் நாயகனாக வசனக் காட்சிகளில் அடக்கி வாசித்தும், பிரச்சினைகளின் ஆழத்தை உணர்ந்து அதிர்ச்சி அடையும் காட்சிகளில் தன் அக்மார்க் அப்பாவித்தன நடிப்பை சிறப்பாகவும் வெளிப்படுத்துகிறார் சிவ கார்த்திகேயன். சண்டைக் காட்சி, நட னத்தில் மெருகேறியுள்ளார். கதாநாய கனுக்கு இணையான கதாபாத்திரத்தில் வரும் அர்ஜுன், சண்டைக் காட்சிகளில் இன்னும் தான் ‘ஆக்‌ஷன் கிங்’தான் என்று நிரூபிக்கிறார்.

அபய் தியோல் நடிப்பில் குறை யில்லை. நாயகியாக கல்யாணி பிரிய தர்ஷன் தன்னால் இயன்றதை தந்திருக் கிறார். அவருக்கான குரல் தேர்வு, தோற்றத்தை மீறிய முதிர்ச்சியுடன் இருக்கிறது. தன் கண்டுபிடிப்பை பறிகொடுத்துவிட்டு, பழியை சுமக்கும் பதின்பருவப் பெண் கதாபாத்திரத்தில் இவானா கச்சிதமாகப் பொருந்துகிறார்.

குறைகளும், தர்க்கமும் மலிந்த திரைப்படத்தை தூக்கி நிறுத்துவதில் ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு பெரும் பங்காற்றுகிறது. டார்ச்லைட் ஒளி யில் நடக்கும் சண்டைக் காட்சிகள், அர்ஜுனின் பிளாஷ்பேக் காட்சிகளில், காட்சியின் மனநிலையை கச்சிதமாக கடத்துகிறது ஒளிப்பதிவு. அதற்கு கைகொடுக்கும் விதமாக செல்வகுமா ரின் கலை இயக்கமும், எஸ்.சிவ குமாரின் தயாரிப்பு வடிவமைப்பும் அமைந்திருக்கின்றன. பின்னணி இசை யில் மட்டுமே கவனிக்க வைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.

இன்றைய கல்விமுறையின் போதாமை குறித்த விமர்சனங்களை முன் வைத்த வகையில் கவனிக்க வைக் கும் இந்த ஹீரோ, திரைக் கதை யிலும், கதாபாத்திர வடிவமைப்பிலும் ‘ஜீரோ’வானதில், சூப்பர் ஹீரோ மிஸ்ஸிங்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x