Published : 20 Dec 2019 08:18 AM
Last Updated : 20 Dec 2019 08:18 AM

குரலில் சாதிக்க ஆசை

வின் நியூஸ் சேனலில் ‘வின் சினிமா’ என்ற திரை நிகழ்ச்சியை வழங்கி வருகிறார் இலக்கியபிரியா. நேர்காணல், சினிமா செய்தி, இசை வெளியீடு, டிரெய்லர், விமர்சனம் என சினிமாவின் பல அம்சங்களுடன் தினமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதுகுறித்து இலக்கியபிரியா கூறியதாவது:

வின் டிவியில் செய்தி தயாரிப்பாளராக உள்ளே வந்த நான், தொகுப்பாளினி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என வளர்ந்து இன்று ‘வின் சினிமா’ நிகழ்ச்சிக்குள்ளும் வந்தாச்சு. இதற்கு முன்பு ஆர்ஜே ஆக பணிபுரிந்த அனுபவம் இருப்பதால், இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக வழங்க முடிகிறது. சினிமா டப்பிங்கிலும் கவனம் செலுத்துகிறேன். அதிலும் பல்வேறு பரிமாணங்களில் திறமையை வெளிப்படுத்த முடியும். அதை நோக்கியதாக என் பயணம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x