சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.19 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.19 | படக்குறிப்புகள்
Updated on
1 min read

காலை 10.45 மணி | BALANGIGA: HOWLING WILDERNESS | DIR: KHAVN DE LA CRUZ | PHILIPPINES | 2018 | 120'

1901ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நடந்த போரில் பலாங்கிகா என்னும் இடம் கடும் பாதிப்புள்ளாக்குகிறது. அமெரிக்கப் படைகளிடமிருந்து ஓடும் குலாஸ் என்னும் சிறுவனும் அவனது தாத்தாவும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். பிணக்குவியல்களில் மத்தியில் ஒரு சிறுவனை கண்டெடுக்கிறான் குலாஸ். அவர்கள் அமெரிக்கப் படையினரிடமிருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் கதை.

11 wins & 20 nominations

பகல் 1.00 மணி | THE LEGEND OF RITA / DIE STILLE NACH DEM SCHUSS | DIR: VOLKER SCHIONDORFF | GERMANY | 2000 | 103'

இளம்பெண் ரீட்டா வோக்ட் ஒரு தீவிர மேற்கு ஜேர்மன் பயங்கரவாதி, அவர் புரட்சியை கைவிட்டவர். கிழக்கு ஜெர்மனியில் இரகசிய சேவையால் வழங்கப்பட்ட புதிய அடையாளத்துடன் கிழக்கு ஜெர்மனியில் குடியேறியவர். கண்காணிக்கப்படுகிறோம் என்ற அச்சத்தில் தொடர்ந்து வாழ்கிறார், ஜெர்மன் மறு ஒருங்கிணைப்புக்குப் பிறகு தவிர்க்க முடியாமல் அவர் எதிர்பார்த்தவாறே நிகழ்கிறது.

4 wins & 5 nominations


பிற்பகல் 3.00 மணி | ESCAPADA / ESCAPADA | DIR: SARAH HIRTT | BELGIUM | 2018 | 89'

பரம்பரை சொத்தைப் பற்றி முடிவெடுக்க வாழ்க்கை தரும் இடர்களால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகள் ஸ்பெயினில் ஒன்று கூடுகின்றனர். திவால் ஆகும் நிலையில் இருக்கும் குஸ்தாவ், அராஜகவாதத்தை ஆதரிக்கும் ஜூல்ஸ், இந்த இரண்டு சகோதரர்களுக்கு நடுவில், மாட்டிக்கொள்ளும், வாழ்க்கையில் எதையோ தேடிக்கொண்டிருக்கும் சகோதரி லூ. ஒவ்வொருவருக்கும் அவர்கள் வாழ்க்கை மீது வித்தியாசமான பார்வை இருக்கிறது. இந்த சொத்தை வைத்து தனிப்பட்ட முறையில் திட்டங்களும் உள்ளன. இந்தத் திட்டங்கள் பல குடும்ப சண்டைகளை மீண்டும் கொண்டு வருகிறது.


மாலை 5.30 மணி | NO SCREENING

மாலை 8.00 மணி | NO SCREENING

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in