Published : 17 Dec 2019 03:08 PM
Last Updated : 17 Dec 2019 03:08 PM

ஆவலுடன் காத்திருக்கிறேன்! - 'சில்லு கருப்பட்டி' இயக்குநர் ஹலிதா ஷமீம்

டிசம்பர் 18 | ரஷ்ய கலாச்சார மையம் | மாலை 6:00 மணி

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதும், உதவி இயக்குனராக பணிப்புறிந்த காலங்களிலும ICAF-யின் தீவிர மெம்பராக இருந்தேன். தினமும் சேம்பர் தியேட்டரில் படம் பார்த்து வந்தேன்.

நுண்ணியலும் அழகியலும் கற்றுக் கொண்ட நாட்கள் அவை. ரசனையையும் பொறுப்பையும் நான் வளர்த்துக் கொள்ள ICAF மற்றும் CIFF முக்கிய காரணமாக இருந்தது. என் முதல் படம் 'பூவரசம் பீப்பீ' CIFF-யில் திரையிடப்பட்டது அளவற்ற மகிழ்ச்சி. Special Jury Mention-ஐயும் அவ்வருடம் பெற்றது.

'சில்லுக்கருப்பட்டி' டிசம்பர் 27 ரிலீசாகிறது. ரிலீஸிற்கு முன்பே இங்கு 18-ஆம் தேதி திரையிடப் போவது இப்படத்திற்கு இன்னும் சிறப்பு. தீவிரமாக சினிமாவை நேசிப்பவர்கள் காணும் அரங்கில் முதலில் இதை கொண்டு சேர்ப்பதை பெருமையாக நினைக்கிறேன்.
'சில்லுக்கருப்பட்டி'யை நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் தமிழகத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளது. படத்தை பார்த்து, ஜோதிகா மேடம் “நான் தமிழில் பார்த்ததிலையே கண்ணியமான படம் இதுவாகத் தான் இருக்கும், காதலை இதுப் போல யாராலும் சொல்ல இயலாது” என்று கூறினார். அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன்!

இது 4 கதைகளின பெட்டகம். நகர நெரிசலில் மனிதம் நெய்யின் 4 நவீன கதைகளை பார்க்கலாம். மேலும் இப்படம் ஒரு ‘ Conversational film’- உரையாடல்கள் நிறைந்தது. 18-ம் தேதி திரையிடலை ஒட்டி படத்தின் ட்ரெய்லரை வெளியடவும் முடிவு செய்திருக்கிறோம்.

இந்தப் படத்தின் திரையிடல் முடிந்தவுடன், நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நன்றி!
ஹலிதா ஷமீம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x