கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளுக்கு எதிரான சாட்டை

கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளுக்கு எதிரான சாட்டை
Updated on
1 min read

டிசம்பர் 18 | ரஷ்ய கலாச்சார மையம் | மாலை 3:00 மணி

பள்ளிக் கல்வித் துறை, ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகிய முத்தரப்பில் தேவைப்படும் மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் அழுத்தம் திருத்தமாகப் பேசியபடம் ‘சாட்டை’. அதன் தொடர்ச்சியாக இல்லாமல், அதில் கையாண்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியை, கல்லூரியைக் கதைக் களமாகக் கொண்டு பேசியிருக்கிறது அதே கூட்டணி.

ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்களுக்கு முக்கியத்துவம் தரும் தனியார் கல்லூரி அது. அதன் முதல்வரான தம்பி ராமையா, சாதி மனப்பான்மை கொண்டவர். இந்தபாரபட்சம், கல்லூரியின் பிற்போக்குத்தனங்கள், நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை தமிழ்ப் பேராசிரியர் சமுத்திரக்கனி சுட்டிக் காட்டுகிறார். ‘மாணவர் சமூகத்துக்கு சாதி கிடையாது’ என்று எடுத்துக் கூறி, மாணவர்கள் இடையிலான விரிசலைத் துடைத்தெறிகிறார்.

மாணவர்களின் உரிமைகளைக் காக்கவும், தேவைகளைக் கேட்டுப் பெறவும் ‘மாணவர் நாடாளுமன்றம்’ அமைக்க அவர்களை ஊக்குவிக்கிறார். இதனால் தம்பி ராமையாவின் கோபம் தீவிரமடைகிறது. சமுத்திரக்கனியை கல்லூரியைவிட்டு வெளியேற்ற முயற்சிக்கிறார். அதில் தம்பி ராமையா ஜெயித்தாரா, கல்லூரியையும் மாணவர்களையும் சமுத்திரக்கனியால் மாற்ற முடிந்ததா என்பது மீதிக் கதை.

பெரும்பாலும், ஓர் ஆசிரியருக்குரிய தொனியுடனேயே அவரைப் பார்க்கப் பழகியிருக்கிறார்கள் பார்வையாளர்கள். அந்த அளவுக்கு, வசனங்களை நம்பிப் பயணிக்கும் கதாபாத்திரங்களை ‘ரெடிமேட்’ சட்டையாக அவருக்கு அணிவிக்கும் போக்கில் இந்த படம் இன்னும் கொஞ்சம் தீவிரம் காட்டியிருக்கிறது.

வறுமையான குடும்பச் சூழலில் இருந்து வரும் மாணவர்களின் பிரச்சினைகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து கல்லூரியில் அடிவைப்பவர்கள், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடு, கல்லூரிகளில் இருக்கும் உள்கட்டமைப்பு சிக்கல்கள், மாணவர்களை அடிமைபோல நடத்த விரும்பும் பேராசிரியர்களின் மனப்பாங்கு என பல்வேறு பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசியிருப்பதற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.

ஓய்வுபெறப்போகும் பேராசிரியருக்கான பிரிவுபச்சார விழாவை மாணவர்களே ஒருங்கிணைப்பது, மாணவர் நாடாளுமன்றம் அமைப்பது போன்ற ஒரு சில ஐடியாக்கள், அதுதொடர்பான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கல்லூரி மாணவர்களின் உண்மையான பிரச்சினைகளைப் பேசும் சில வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன. உயர்கல்வியில், கல்லூரிச் சூழலில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதியச் சிக்கல்கள், பிரச்சினைகளுக்கு எதிராகச் சாட்டை சுழற்றுவதில் கவர்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in