Published : 16 Dec 2019 11:48 AM
Last Updated : 16 Dec 2019 11:48 AM

தவறவிடாதீர்: 'உயரே' - தரை இறங்கும் விமானம்

டிசம்பர் 17 | தேவிபாலா | மதியம் 3:00 மணி

ஆர்.ஜெயகுமார்

தென்னிந்தியாவில் அதிகம் ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடப்பது கேரளத்தில்தான் என தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை சுட்டுகிறது. பெண்களுக்கு எதிராகப் பதிவுசெய்யப்படாத ஆசிட் வீச்சுச் சம்பவங்களும் அங்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதைப் பின்னணியாகக் கொண்டது ‘உயரே’.

ஆசிட் வீச்சுக்கு ஆளான பெண்களுள் ஒருவரை இந்தப் படம் தன் நாயகியாகச் சூட்டிக்கொண்டுள்ளது. சிறு பெண்ணாக விமானத்தில் செல்லும் அவளை அந்தரத்தில் பறக்கும் விநோதம் ஆட்கொண்டுவிடுகிறது. அந்த வசீகரத்தில் ஒரு விமானி ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறாள். தாயில்லாப் பிள்ளைக்கு அப்பா ஆதரவாக இருக்கிறாள். அவள் கனவை நிறைவேற்ற முயல்கிறார். இதற்கிடையில் காதலும் வருகிறது. தனித்த ஆளுமையும் லட்சியமும் உள்ள அவளைக் கைக்கொள்ள அவன் பரிதவிக்கிறான். இவளுக்கும் அவனை நிராகரிக்க முடியவில்லை. அதற்கான காரணத்தை தந்தை-மகளுக்குமான ஒரு சம்பாஷனையில் படம் சொல்லிவிடுகிறது.

இந்தப் படத்தின் திரைக்கதையை இரட்டைக் கதாசிரியர்கள் போபி-சஞ்சய் எழுதியிருக்கிறார்கள். நவ மலையாள சினிமாவின் படங்களான ‘ட்ராபிக்’, ‘அயாளும் ஞானும் தம்மில்’, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’, ‘மும்பை போலீஸ்’ ஆகிய படங்களின் வெற்றிக்கு இவர்களின் திரைக்கதை வலுச் சேர்த்தது.

நாயகியாக பார்வதி திருவோத்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவளது காதலான நடித்துள்ள ஆசிப் அலி, பெரிய காட்சிப் பின்னணி இன்றி உடல் மொழியிலேயே தன் பதற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் டோவினோ தோதமஸ் நாயகியின் நண்பனாக இரண்டாம் பாதியில் வருகிறார்.

படத்தின் முதல் பாதி, நாயகியின் லட்சியம், அதற்கு துணை நிற்கும் தந்தை, பதற்றமான காதலன் என அவளது சுற்றத்திலிருந்து தொடங்குகிறது. சிறு சிறு காட்சிகள் வழி இதை அறிமுக இயக்குநர் மனு அசோகன் இதைச் சித்தரிக்கிறார். நாயகியின் காதலையும் அதன் உள்ளில் உள்ள முரண்பாடுகளையும் விஸ்தீரணமில்லாமல் கூர்மையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதி, இந்த அம்சங்கள் எல்லாம் நாயகியை நோக்கி இறுகுகின்றன. காதலனின் பதற்றம் அவளது விமானிப் பயிற்சி வகுப்பைக் குறுக்கீடுகிறது. அவளது இயல்பு, அவன் மீதான பரிவாக வெளிப்படுகிறது. இந்த உறவுச் சிக்கல் முறுகும் இடத்தில் படம் உண்மையில் பதற்றம் மிக்கதாக ஆகுகிறது.

இதற்கிடையில் வாழ்க்கைக்குள் ஒரு விமான நிறுவனத்தின் அதிகாரி எனப் பலரும் குறுக்கிடுகிறார்கள். அவர்கள் ஒரு காட்சியி வழியே அறிமுகமானாலும் அவர்களின் அந்த வாழ்க்கையின் ஓர் அம்சமாகப் படம் பிரதிநிதித்துவப்படுத்துவதில் படம் வெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x