Published : 16 Dec 2019 11:44 AM
Last Updated : 16 Dec 2019 11:44 AM

CIFF-ல் டிசம்பர் 17 அன்று என்ன படம் பார்க்கலாம்? - இந்து குணசேகர் பரிந்துரைகள்

QUEEN OF HEARTS | DENMARK | 2019 | தேவி, மாலை 7.00 மணி

தனது கணவரின் முதல் மனைவியின் பதின்ம வயது மகனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைக்கும் ஒரு பெண் தனது குடும்ப வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் சீர்கேட்டுக்கு ஆளாக்குகிறாள். இனி சரி செய்ய முடியாத, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

HOLY BEASTS | DOMINICAN REPUBLIC | 2018 | தேவிபாலா, மாலை 8.00 மணி

வயதான நடிகை வேறா, சாண்டோ டொமினிகோ வந்திறங்குகிறாள். தனது கடைசி படமாக தனது இறந்த நண்பன் ஒருவனின் முடிவடையாத கதையைப் படமாக எடுக்க நினைக்கிறாள். அவள் நடிகையாக உச்சத்தில் இருந்த நேரத்தில் அவளது நண்பர்களாக இருந்த தயாரிப்பாளர் விக்டரும், ஒளிப்பதிவாளர் மார்டினும் அவளுடன் படத் தயாரிப்பில் இறங்க்கின்றனர். படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. கவர்ச்சிகரமான பல விஷயங்களுக்கு நடுவில், பிரச்சினையும், மரணமும் கூட சூழ்ந்து கொண்டு படத் தயாரிப்பில் மர்மமான சூழலைக் கொண்டு வருகிறது.

THE MAN WHO SURPRISED EVERYONE | RUSSIA | 2018 | அண்ணா, காலை 9.30 மணி

சைபீரியன் காடுகளில் தைரியமாக வேலை செய்து வரும் மாநில வனக் காவல் அதிகாரி ஈகோர். தனது குடும்பத்தால், கிராமத்தினரால் விரும்பப்படும், மதிக்கப்படும் ஒருவன். அவன் மனைவியோடு சேர்ந்து இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து வருகிறான். ஆனால் ஒரு நாள் தனக்கு கான்சர் இருப்பதும், தான் வாழ இரண்டு மாதங்கள் மட்டுமே உண்டு என்றும் தெரிந்து கொள்கிறான். நோயை எதிர்க்கும் ஒரு வழியாக பெண் வேடம் அணிந்து கொள்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகளே கதை.

SCENT OF MY DAUGHTER | TURKEY | 2019 | கேஸினோ, காலை 9.45 மணி

2016-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்துக்கு நடுவே கனரக சரக்கு லாரியை மோதச் செய்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. அந்த பகுதியின் அழகை ரசிக்க வந்தவர்களுக்கு ஏற்பட்ட கொடூரம். பெற்றோர், கணவர், ஆறு வயது மகளை பறிகொடுத்த பீட்ரைஸ் துருக்கியின் அர்மீனியன் கிராமத்துக்கு தனது உறவினர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல நடத்தும் போராட்டத்தை விவரிக்கிறது.

THE UNKNOWN SAINT | FRANCE | 2019 | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி, மாலை 7.00 மணி

அமின் பணத்தை கொள்ளையடித்துவந்து, சிறிய குன்றின் மீது புதைத்து வைக்கிறார். அதன்பின் போலீஸார் அமினை கைதுசெய்து அழைத்துச் செல்கிறது. சில ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் மீண்டும் அந்த குன்றுக்கு வந்து தன்னுடைய பணத்தை எடுக்க அமின் வருகிறார். ஆனால், அந்த குன்றில் அமின் புதைத்து வைத்திருந்த பணப்பைக்கு மேலே சிறிய கோயிலை யாரோ கட்டிவிட்டார்கள். குன்றைச் சுற்றி சிறிய கிராமமே உருவாகிவிட்டது. அந்த கிராமத்தில் தங்கும் அமின் எவ்வாறு பணப்பையை எடுத்தார், எடுத்தாரா என்பது கதையில் காணலாம்.

PAREEKSHA | HINDI | 2019 | ரஷ்ய கலாச்சார மையம், காலை 9.30 மணி

நல்ல கல்வி என்பது மிகப்பெரிய சமூக சமநிலை! ரிக்ஷா ஓட்டும் புட்சி அதை அறிந்திருந்தார். அவர் தினமும் காலையில் வசதியான வீடுகளில் இருந்து புகழ்பெற்ற தனியார் ஆங்கிலப் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை விருப்பத்தோடு செய்துவந்தார். மேலும் தனது சொந்த குழந்தைக்கு எப்போதாவது அந்த வாய்ப்பை வழங்க முடியுமா என்பதும் அவரது கனவு. இந்த கனவை அவர் நிறைவேற்ற முனையும்போது அவரே அறியாமல் அவரை ஒரு ஆபத்தான பாதையில் செல்ல நேரிடுகிறது. இதற்காக அவர் மேற்கொள்ளும் செயல்கள் அவர் வைத்திருக்கும் அனைத்தையும் சிதைக்குமா? இந்திய கல்விமுறையில் உள்ள சிக்கல்களை அலசி ஆராயும் இப்படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x