Published : 16 Dec 2019 11:33 AM
Last Updated : 16 Dec 2019 11:33 AM

சென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.17 | படக்குறிப்புகள்

பிற்பகல் 2.00 மணி | HOMESTAY / LINH HON TAM TRU | DIR: PARKPOOM WONGPOOM | THAILAND | 2018 | 132'

படத்தின் நாயகன் ஒரு மார்ச்சுவரியில் கண்விழிக்கிறான். குழம்பிப் போகும் அவன் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். அப்போது அவன் முன்னால் தோன்றும் சிலர் தங்களை ''தி கார்டியன்ஸ்'' என அறிமுகம் செய்து கொள்கின்றனர். அவர்கள் நாயகனிடம் இது அவனுக்கு இரண்டாவது வாய்ப்பு என்றும், தற்கொலை செய்து இறந்து போன மின் என்னும் இளைஞன் ஒருவனின் உடலில் இருக்கவேண்டும் எனவும் கூறுகின்றனர். மேலும் 100 நாட்களுக்குள் மின்னுடைய மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் அவன் நிரந்தரமாக இறக்க நேரிடும் என்று கூறிகின்றனர். மின்னுடைய மரணத்தை நாயகன் கண்டுபிடித்தானா? அவன் யார்? என்ற கேள்விகளுக்கான விடையே 'HOMESTAY'.

மாலை 4.00 மணி | HEARTS AND BONES / HEARTS AND BONES | DIR: BEN LAWRENCE | AUSTRALIA | 2019 | 111'

ஒரு போர் புகைப்படக் கலைஞரான ஹூகோ வீவிங் மற்றும் அகதி ஆந்த்ரே லூரி இருவரையும் அச்சுறுத்தும் புகைப்படம் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றனர். அந்தப் புகைப்படம் கிராம கண்காட்சியில் இடம்பெறப் போவதுதான் உச்சபட்ச பிரச்சினை.... இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பென் லாரன்ஸ் ஒரு அறிவார்ந்த, தார்மீக சிக்கலான மற்றும் ஆழமாக நகரும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

மாலை 7.00 மணி | THE UNKNOWN SAINT / LE MIRACLE DU SAINT INCONNU |DIR: ALLA EDDINE ALJEM | FRANCE | 2019 | 119'

அமின் பணத்தை கொள்ளையடித்துவந்து, சிறிய குன்றின் மீது புதைத்து வைக்கிறார். அதன்பின் போலீஸார் அமினை கைதுசெய்து அழைத்துச் செல்கிறது. சில ஆண்டுகள் சிறைவாழ்க்கைக்குப்பின் மீண்டும் அந்த குன்றுக்கு வந்து தன்னுடைய பணத்தை எடுக்க அமின் வருகிறார். ஆனால், அந்த குன்றில் அமின் புதைத்து வைத்திருந்த பணப்பைக்கு மேலே சிறிய கோயிலை யாரோ கட்டிவிட்டார்கள். குன்றைச் சுற்றி சிறிய கிராமமே உருவாகிவிட்டது. அந்த கிராமத்தில் தங்கும் அமின் எவ்வாறு பணப்பையை எடுத்தார், எடுத்தாரா என்பது கதையில் காணலாம்.

1 win & 7 nominations

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x