

காலை 9.30 மணி | PAREEKSHA | DIR: PRAKASH JHA | HINDI | 2019 | 120'
நல்ல கல்வி என்பது மிகப்பெரிய சமூக சமநிலை! ரிக்ஷா ஓட்டும் புட்சி அதை அறிந்திருந்தார். அவர் தினமும் காலையில் வசதியான வீடுகளில் இருந்து புகழ்பெற்ற தனியார் ஆங்கிலப் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை விருப்பத்தோடு செய்துவந்தார். மேலும் தனது சொந்த குழந்தைக்கு எப்போதாவது அந்த வாய்ப்பை வழங்க முடியுமா என்பதும் அவரது கனவு. இந்த கனவை அவர் நிறைவேற்ற முனையும்போது அவரே அறியாமல் அவரை ஒரு ஆபத்தான பாதையில் செல்ல நேரிடுகிறது. இதற்காக அவர் மேற்கொள்ளும் செயல்கள் அவர் வைத்திருக்கும் அனைத்தையும் சிதைக்குமா? இந்திய கல்விமுறையில் உள்ள சிக்கல்களை அலசி ஆராயும் இப்படம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
பகல் 12.00 மணி | HIGHLIGHT / HAILLAIT | DIR: ASGHAR NAIMI | IRAN | 2018 | 90'
ஈரானின் வடக்கில் ஒரு ஆணும் பெண்ணும் கார் விபத்துக்குள்ளாகியுள்ளனர் கோமா நிலைக்குச் செல்கிறார்கள். இந்த இருவருக்கும் ஏன் இப்படி நேர்ந்தது. ஏன் ஒன்றாக சேர்ந்தார்கள் என்பது பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அதுமட்டுமின்றி வடக்கில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி அவர்களின் துணைவர்களுக்கு எதுவும் தெரியாது.
மாலை 3.00 மணி |
தமிழ்த் திரைப்படம்: தோழர் வெங்கடேசன்
மாலை 6.00 மணி
தமிழ்த் திரைப்படம்: பக்ரீத்