Published : 16 Dec 2019 11:23 AM
Last Updated : 16 Dec 2019 11:23 AM

சென்னை பட விழா | கேஸினோ  | டிசம்.17 | படக்குறிப்புகள்

காலை 9.45 மணி | SCENT OF MY DAUGHTER / SCENT OF MY DAUGHTER | DIR: OLGUN OZDEMIR | TURKEY | 2019 | 103'

2016-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்துக்கு நடுவே கனரக சரக்கு லாரியை மோதச் செய்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. அந்த பகுதியின் அழகை ரசிக்க வந்தவர்களுக்கு ஏற்பட்ட கொடூரம். பெற்றோர், கணவர், ஆறு வயது மகளை பறிகொடுத்த பீட்ரைஸ் துருக்கியின் அர்மீனியன் கிராமத்துக்கு தனது உறவினர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல நடத்தும் போராட்டத்தை விவரிக்கிறது.

6 wins & 13 nominations.

பகல் 12.15 மணி | THE SILENCE OF OM | DIR: LEADING LI | THAIWAN | 2018 | 100'

வன்முறையை ஆயுதமாக கொண்டு வாழும் 'தாதா' குடும்பத்தைச் சேர்ந்தவர் ஓம்-கா. எப்போதும் தனது வாழ்கை முற்றுப்பெற்று விடும் என்ற எண்ணத்துடனேயே அவர் வாழ்க்கையை கழிக்கிறார். ஆனால் பல நேரங்களில் அதிருஷ்டவசமாக சிக்கலில் இருந்து விடுபடும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் தான் ஒரு ரவுடி என்ற அடையாளத்தில் இருந்து விடுபட முடியுமா என்பது தான் அவரது ஏக்கம். ஆனால் அவரது ஆசையை வன்முறையை வாழ்க்கையாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தையர் ஏன் அவரது நண்பர்கள் கூட பூர்த்தி செய்ய முடியாது. ஆனால் அவரது வாழ்க்கையில் ஜிங் ஜுவான் என்ற பெண் குறுக்கிடுகிறார். இது அவருக்கு புதிய வாழ்க்கையை கொண்டு வருகிறது.


பகல் 2.45 | THE COMPONENTS OF LOVE / DIE EINZELTELLE DER LIEBE | DIR: MIRIAM BLIESE | GERMANY | 2019 | 97'

சோபியும் ஜார்ஜும் காதலில் விழுகிறார்கள். இந்த நிலையில் தன்னை கைவிட்டு சென்ற முன்னாள் காதலரால் தான் தாயாகி இருப்பது சோபிக்கு தெரிய வருகிறது. ஜார்ஜ் அந்த குழந்தைக்கு தந்தையாக தன்னை மகிழ்ச்சியாக இந்த உலகிறகு அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்த நிலையில் நவீனகால பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை சோபியும், ஜார்ஜும் எதிர்கொள்கிறார்கள். வேலைக்கு செல்ல இருவரும் விரும்புவதால் குழந்தையை யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற பிரச்சனை எழுகிறது. இதனை இருவரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே தி காம்போனட்ஸ் ஆஃப் லவ் படத்தின் கதை.

2 nominations

மாலை 4.45 மணி | GIRL WITH NO MOUTH | PERI | DIR: CAN EVERNOL | TURKEY / 2019 | 97'

துருக்கிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு, படம். அணுசக்தி பேரழிவால் ஏற்படும் விபரீதங்களையும், அதை எதிர்த்து போராடுபவர்களின் வாழ்க்கைப் பயணத்தையும் விவரிக்கிறது. கதிர்வீச்சுக்கு ஆளான குழந்தைகள் உடலில் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. அப்படி வாயில் குறைபாடுடன் பிறந்த பெண் பெரிஹான். அணுசக்தியின் அவலத்தை வெளியுலகம் தெரியாமல் இருப்பதற்காக இவர்களை ராணுவம் துரத்துகிறது. இதனால் பெரிஹானின் தந்தை அவளை தலைமறைவாக வனப்பகுதியில் வளர்க்கிறார். துரத்தப்படுவதும், தப்பித்துச் செல்வதும் அதுபற்றிய பயணத்தை விவரிக்கிறது கதை.

மாலை 7.00 மணி | DIVINE LOVE / DIVINO AMOR | DIR: GABRIEL MASCARO | BRAZIL | 2019 | 132'

பிரேசிலில், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் கிறிஸ்துவ மதம் இணைந்துள்ள காலகட்டம். 42 வயதான பெண் வழக்கறிஞர், விவாகரத்து வேண்டி தன்னிடம் வரும் தம்பதிகளுக்கு ஆலோசனை கொடுத்து சேர்த்து வைக்கிறார். கணவன் மீது அபரிமிதமான காதல் கொண்டு, அவன் மூலம் குழந்தை பெற்று வளர்க்க நினைக்கிறாள். இந்த வேளையில் அவளது திருமணத்தில் பெரிய பிரச்சினை வெடிக்கிறது. இது அவளை கடவுளுக்குப் பக்கத்தில் கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x