

காலை 11.00 மணி | GOLDIE | GOLDIE | DIR: SAM DE JONG | NETHERLANDS | 2019 | 88'
ஒரு சிக்கலான பிரச்சினைக்குப் பிறகு தனது தாய் கைது செய்யப்பட, கோல்டீ எனும் டீன்ஏஜ் பெண்ணும் வாழ்வை எதிர்கொள்ளும் போராட்டங்களை இப்படம் பேசுகிறது. கோல்டீ, தனது தங்கைகள் மீது அதிகம் பாசம் கொண்டவள். அவளுக்கு ஹிப் ஹாப் நடனத்தில் ஈடுபாடு. ஒரு நடனக் கலைஞர் ஆகவேண்டுமென்று ஆவல் ஒருபக்கம் இன்னொரு குடும்பம் சிதறாமல் இருக்கவேண்டுமென்று ஆசை. தடைகளையும் எதிர்கொள்ளவேண்டும். லட்சியத்தையும் வெல்ல வேண்டும். அவளது முயற்சிகள் பலித்தனவா?
பிற்பகல் 2.00 மணி | HOLY BOOM / HOLY BOOM |DIR: MARIA LAFI | GREECE | 2018 | 90'
ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை. ஒரே இடத்தில் வசிக்கும் நான்கு அந்நியர்களின் வாழ்க்கை, சட்டவிரோதமாக குடியேறி, ஒரு கார் விபத்தில் இறந்த தனது கணவரின் சடலத்தை கூட அடையாளம் காண தடை விதிக்கப்படுவதால் பிறந்த குழந்தையுடன் தவிக்கும் ஆடியா, தாலியாவும் உள்ளூர் சமூகமும் ஏற்றுக்கொள்ள போராடும் ஐஜே, இருந்த ஒரே மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கும் ஒரே வாய்ப்பை இழந்துநிற்கும் தாலியா என பலவிதமான கதைகள் ஒரு புள்ளியில் இணைகிறது. ஐஜே என்பவன் விளையாட்டுக்காக பக்கத்துவீட்டு தபால்பெட்டியை வெடிக்கவைக்க அது சட்டபூர்வமான விளிம்பில் உயிர்வாழ ஒரு வழியைத் தேடும் அந்நியர்களுக்கு புது வழியைக் காட்டுகிறது.
மாலை 4.30 மணி | SOLE | SOLE | DIR: CARLO SIRONI | ITALY| 2019 | 90'
லீனா, எர்மானோ இருவரை சுற்றியே கதை முழுவதும் நகர்கிறது. போலந்து நாட்டில் இருந்து 7 மாத கர்ப்பிணியாக வரும் லீனா தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை விற்க முயல்கிறார். அப்போது அவருக்கு எர்மானோ அறிமுகமாகிறார். லீனாவின் கணவராகவும், குழந்தைக்கு தந்தையாகவும் நடிக்க எர்மானோ சம்மதிக்கிறார். குழந்தையை விற்கும் பணத்தில் இருவரும் பிரித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.
எர்மானோவின் மாமா பேபியோவுக்கு குழந்தை இல்லாததால் தானே குழந்தை வாங்கிக் கொள்வதாகவும், அதுவரை வீட்டில் தங்கி இருக்குமாறும் இருவரையும் கேட்டுக்கொள்கிறார். எர்மானோ, லீனா இருவரும் வெளிஉலகிற்கு தம்பதி போல நடக்கிறார்கள். ஆனால், நாளடைவில் லீனா மீது காதல் வருகிறது.
அதை அவன் வெளிக்காட்டவில்லை. லீனாவுக்கு குழந்தை பிறக்கிறது, குழந்தையை தனது குழந்தை போல் எர்மானோ பாவிக்கிறான். குழந்தையை விட்டுச்செல்லவும் லீனாவுக்கு மனமில்லை. குழந்தையை லீனா விற்றாலா, எர்மானாோ லீனாவிடம் காதலைக் கூறினானா என்பதுதான் கதை. இளம்வயதில் தந்தையான ஒருவரின் உணர்வுகளையும், காதலையும், தாய்மையையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.
3 wins & 3 nominations
மாலை 7.00 மணி | QUEEN OF HEARTS | DRONNINGEN | DIR: MAY EL THOUKY | DENMARK / SWEDEN | 2019 | 127'
தனது கணவரின் முதல் மனைவியின் பதின்ம வயது மகனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைக்கும் ஒரு பெண் தனது குடும்ப வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் சீர்கேட்டுக்கு ஆளாக்குகிறாள். இனி சரி செய்ய முடியாத, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.
9 wins & 10 nominations