Published : 15 Dec 2019 11:37 AM
Last Updated : 15 Dec 2019 11:37 AM

CIFF-ல் டிசம்பர் 16 அன்று என்ன படம் பார்க்கலாம்? - போத்திராஜ் பரிந்துரைகள்

THE BRA | AZERBAIJAN | 2019 | தேவி, மாலை 4.30 மணி

ரயில் ஓட்டுநர் நுர்லான் ஓய்வு பெறுவதற்கு முன் கடைசி ஒரு முறை பாகுவுக்கு ரயில் ஓட்டிச் செல்கிறார். மக்கள் வசிக்கும் பகுதியை ஊடுருவிச் செல்லும் ரயில் பாதையில், ஒரு பெண்ணின் உள்ளாடை அவரது ரயில் கண்ணாடியில் சிக்குகிறது. தனது தனிமைக்கு வடிகாலாக, பாகு பகுதியில் ஒரு அறை எடுத்துத் தங்கி, அந்த உள்ளாடையின் உரிமையாளர் யார் என்று தேடிப் போகிறார் நுர்லான்.

BUOYANCY | AUSTRALIA | 2019 | தேவி, மாலை 7.00 மணி

தென்கிழக்கு ஆசியாவில் நவீன அடிமைத்தனத்தை புயோயான்ஸி திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது. கிராமப்புற கம்போடியாவில் வாழும் 14 வயது சக்ரா, தனது கடுமையான தந்தையுடன் ஒரு வெடிக்கும் மோதலுக்குப் பிறகு அவரிடமிருந்து பிரிந்துசெல்கிறான். எல்லையைத் தாண்டி தாய்லாந்திற்குள் செல்ல நன்கு ஊதியம் பெறும் தொழிற்சாலை வேலையைப் பெறுவதற்கான நம்பிக்கையில் அவசரத் திட்டங்களில் ஈடுபடுகிறான். ஆனால் சிறுவன் உடனடியாக இரக்கமற்ற தரகரால் மோசடி செய்யப்படுகிறான், ஒரு மோசமான மீன்பிடி இழுவைப் படகில் ஏறுகிறான், 14 வயது சக்ரா ஒரு தாய்லாந்து மீன்பிடிக் கப்பலின் கேப்டனுக்கு அடிமைத் தொழிலாளியாக விற்கப்படுகிறான் 14 வயது சக்ரா. கப்பலில் கேப்டனின் ஆட்சி கொடூரமானது மற்றும் தன்னிச்சையானது.

ADAM AND EVELYN | GERMANY | 2018 | தேவிபாலா, பிற்பகல் 3.00 மணி

இன்கோ சுகுல்சோ எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். கிழக்கு ஜெர்மனியில் 1989 கோடைக்காலம். ஆடம் ஒரு தையல்காரராகவும், ஈவ்லின் சர்வராகவும் பணியாற்றுகிறார். அவர்கள் ஒன்றாக விடுமுறைக்கு வெளியே செல்ல திட்டமிடுகின்றனர். ஆடம் தன்னை ஏமாற்றுவதை ஈவ்லின் கண்டுபிடித்தபோது விடுமுறைக்கு தான் மட்டும் வெளியேற முடிவு செய்கிறாள்.

HOMEWARD | UKRAINE | 2019 |அண்ணா, மாலை 4.30 மணி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்த போரில் தனது மூத்த மகனை இழந்த முஸ்தபா, சிறுவனின் உடலை அவன் பிறந்த நிலமான கிரிமியா தீபகற்பத்திற்கு கொண்டு வர தீர்மானிக்கிறான். அவரும் அவரது இளைய மகனும் சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொண்டனர், எப்போதும் இடைவெளியோடு இருக்கும் அவர்களிடையே உறவை ஆழமான உறவு ஏற்பட அந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

IRINA |BULGARIA |2018 | கேஸினோ, மாலை 4.45 மணி

சிறு நகரமான பல்கேரியாவில், பகுதி நேரமாக வேலை செய்து வருகிறாள் ஐரினா. அவள் வேலையை விட்டு நீக்கப்படும் அதே நாளில் அவளது கணவன் மோசமான விபத்தை சந்திக்கிறான். அவளது குடும்பம் வறுமையில் சிக்குகிறது. குடும்பத்துக்காக வாடகைத் தாயாக மாறுகிறாள். ஏற்கனவே உடைந்து போயிருக்கும் அவளது வாழ்வில், வயிற்றில் வளரும் கருவால் நிறைய சண்டையும் அவநம்பிக்கையும் பெருகுகிறது. ஆனால் மெதுவாக, அன்பு, மன்னித்தல் ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை ஐரினா புரிந்துகொள்கிறாள்.

KOLAAMBI | MALAYALAM | 2019 |ரஷிய கலாச்சார மையம், பகல் 12.00 மணி

ஒரு இளம் பெண் கலைஞர் கலைக் கண்காட்சியில் தனது கலைப்படைப்புகளை நிறுவுவதற்காக வருகிறாள். கொச்சியில் ஒரு வயதான தம்பதிகளை சந்திக்கிறாள். அவர்கள் எல்.பி.ரிக்கார்டுகள் மூலம் லவுட்ஸ்பீக்கர்களில் பாடல்களை ஒலிக்கச்செய்தவர்கள். ஆனால் அவர்களது லவுட்ஸ்பீக்கர் ஒலிபெருக்கிகளுக்கு தடை வரவே அவர்கள் வாழ்க்கை சற்றே பின்னடைவு காண்கிறது. இந்நிலையில்தான் கொச்சி வரும் இளம் பெண் கலைஞர் அந்த வயதான தம்பதிகளை தற்செயலாய் சந்திக்கும்போது அவர்கள் வாழ்வில் எத்தகைய மகிழ்ச்சிகளை அப்பெண் உருவாக்குகிறாள் என்பதை கொலாம்பி எடுத்துக்காட்டுகிறது.

PORTRAIT OF A LADY ON FIRE | FRANCE | 2019 | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி, மாலை 7.00 மணி

18-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் அது. இளம் ஓவியர் மரியன், தனது மாணவர்களுக்கு வரைவது குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அவளின் மாணவர், மரியனின் ஓவியம் குறித்துக் கேள்வி எழுப்புகிறார். கடந்த காலத்துக்குள் மூழ்குகிறாள் மரியன். ஃப்ரான்ஸ் தீவொன்றுக்கு ஹலோயீஸ் என்னும் இளம்பெண்ணை ஓவியம் வரையச் செல்கிறாள் மரியன். தன்னை வரைவதில் விருப்பமில்லாத ஹலோயீஸ் மறுப்புத் தெரிவிக்கிறாள். அவளுடன் மரியன் அன்பாகப் பழகுகிறாள். இருவரின் நட்பு அடுத்தகட்டத்துக்குச் செல்கிறது. குகையொன்றுக்கு நடைபயணம் செல்பவர்கள், முதல்முறையாக முத்தமிட்டுக் கொள்கின்றனர்... இப்படியாகச் செல்லும் மரியனின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது... அது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x