சென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.16 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.16 | படக்குறிப்புகள்
Updated on
1 min read

பிற்பகல் 2.00 மணி |HIER / TEGNAP | DIR: BALLNT KENYERES | HUNGARY | 2018 | 119'

மைய கதாபாத்திரமான, 50 வயதான விக்டர் கன்ஸ் உலகளவில் செயல்படும் ஒரு செழிப்பான 'கட்டிடம் மற்றும் சிவில் இன்ஜினியரிங்' நிறுவனத்தை நடத்துகிறார். அவர் பயணத்தை வெறுக்கக்கூடியவர் என்றாலும் வட ஆபிரிக்காவில் ஒரு கட்டிடத் தளத்தில் மிகவும் விலையுயர்ந்த சில சிக்கல்கள் ஏற்படுவதால் அவர் அங்கு செல்ல வேண்டிய நிலைமை. தன் மனதின் ஆழத்தில் கவனமாக புதைக்கப்பட்டுள்ள தனது இளமை நினைவுகளோடு தொடர்புடைய ஒரு நாட்டிற்குத்தான் அவர் செல்கிறார். அங்கு கடந்த காலமும் நிகழ்காலமும் பின்னிப்பிணைய, கடந்த கால அன்பின் திடீர் தோற்றம் அவரை ஒரு உலகத்திற்கு இட்டுச் செல்கிறது

மாலை 4.00 மணி | HELMET HEADS / CASCOS INDOMABLES | DIR: ERNESTO VILLABLOBOS | BELGIUM | 2018 | 89'

மான்ச்சா கொரியர் நிறுவனத்தில் வேலை செய்பவன். வாழ்க்கையை அதன் போக்கில் எந்த பெரிய எதிர்பார்ப்புமின்றி வாழும் ஒருவன். தனது பைக்கை ஓட்டுவது, காதலி க்ளாராவுடன் இருப்பது,சக ஊழியர்கள் நண்பர்களுடன் சுற்றுவது மட்டுமே அவனுக்கு முக்கியம். இவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலையை விட்டு நீக்கப்படும் போது மான்ச்சாவின் கவலையில்லா வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பைக் அனுமதிக்கப்படாத ஒரு தீவுக்குள் அவர்கள் செல்கின்றனர். வேறு எந்த வேலை வாய்ப்பும் இல்லாதததால் மான்ச்சா கடன் வசூலிக்கும் பைக்கர் கும்பலை உருவாக்குகிறார். அவரது வாழ்க்கை முறையை பாதுகாத்து நண்பர்களின் முயற்சியில் மீண்டும் கிளாராவை வெல்கிறார்.

மாலை 7.00 மணி | PORTRAIT OF A LADY ON FIRE / PORTRAIT DE LA JEUNE ILLE EN FEU |DIR: CELINE SCIAMMA | FRANCE | 2019 | 119'

18-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் அது. இளம் ஓவியர் மரியன், தனது மாணவர்களுக்கு வரைவது குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அவளின் மாணவர், மரியனின் ஓவியம் குறித்துக் கேள்வி எழுப்புகிறார். கடந்த காலத்துக்குள் மூழ்குகிறாள் மரியன். ஃப்ரான்ஸ் தீவொன்றுக்கு ஹலோயீஸ் என்னும் இளம்பெண்ணை ஓவியம் வரையச் செல்கிறாள் மரியன். தன்னை வரைவதில் விருப்பமில்லாத ஹலோயீஸ் மறுப்புத் தெரிவிக்கிறாள். அவளுடன் மரியன் அன்பாகப் பழகுகிறாள். இருவரின் நட்பு அடுத்தகட்டத்துக்குச் செல்கிறது. குகையொன்றுக்கு நடைபயணம் செல்பவர்கள், முதல்முறையாக முத்தமிட்டுக் கொள்கின்றனர்... இப்படியாகச் செல்லும் மரியனின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது... அது..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in