Published : 15 Dec 2019 11:29 AM
Last Updated : 15 Dec 2019 11:29 AM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.16 | படக்குறிப்புகள்

காலை 9.30 மணி | GO TO HELL AND TURN LEFT | DIR: CARLO CALDANA | USA | 2018 | 89'

ஓயிப் ஷ்ச்மிபிலிட்ஸ் எனும் ஒரு செவிகேளா ஓவியரின் கதை இது. தனது மனைவியின் மறைவும் குடிப்பழக்கமும் அவரை அலைக்கழிக்கிறது. அவர் தனது முகவரால் ஓர் உளவாளியாக யாரோ ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்கிறார். அங்கு அவரது மனைவி எமிலியைப் போன்ற ஒரு விருந்தினரைக் காண்கிறார். அவர் தவறாக புரிந்துகொண்டாரா அல்லது அங்குள்ளவர்கள்தான் ஏமாற்றுகிறார்களா? அவருக்கு ஒரே குழப்பம். தவறான புரிதல் மற்றும் சூழ்ச்சியின் சூறாவளியில் சிக்குகிறார்.

பகல் 12.00 மணி | EASY LOVE | TAMER JANDALI | GERMANY | 2019 | 89'

இயக்குநர் தமர் ஜண்டாலியின் பாராரட்டுக்குரிய சோதனை முயற்சி திரைப்படம் இது.. ஜெர்மனியின் கொலோனில் வாழும் ஏழு ஆண்களையும் பெண்களையும் பின்தொடர்ந்து ஒரு ஆவணப்படத்தைப் போல எடுத்த இயக்குநர் அதை ஒரு புனைகதையாகவும் மாற்றினார். இப்படத்தில் வருபவர்கள் எல்லோருமே உணர்ச்சிப்பூர்வமான பாதுகாப்பு மற்றும் இன்பம் ஆகியவற்றிற்கு இடையில் ஒரு சமநிலையைத் தேடுபவர்கள். கதாபாத்திரங்களின் அச்சம், கனவுகள், கற்பனைகளை யதார்த்தமாக பார்வையாளர்களிடம் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குனர். காதலை கொண்டவர்களுக்கான படமே ஈசி லவ்.

பிற்பகல் 2.30 மணி | NINA WU / JUO REN MI MI | DIR: MIDI Z | TAIWAN | 2019 | 102'

8 வருடங்களாக சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருப்பவள் நடிகை நினா. 1960ஆம் ஆண்டு ஒரு த்ரில்லர் படத்தில் நாயகியாக நடிக்கும் பெரிய வாய்ப்பு ஒன்று நினாவுக்கு கிடைக்கிறது. முழு நிர்வாண காட்களிலும், படுக்கையறை காட்சிகளும், இயக்குநரின் முரட்டுத்தனமும் நினாவுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன. அவளது உளவியல் சிக்கல் மெல்ல வெளிப்படத் தொடங்குகிறாள். அதிலிருந்து நினா மீண்டாளா என்பதே இப்படத்தின் கரு.

மாலை 4.30 மணி | HOMEWARD | EVGE |DIR: NARIMAN ALIEVE | UKRAINE | 2019 | 96'

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்த போரில் தனது மூத்த மகனை இழந்த முஸ்தபா, சிறுவனின் உடலை அவன் பிறந்த நிலமான கிரிமியா தீபகற்பத்திற்கு கொண்டு வர தீர்மானிக்கிறான். அவரும் அவரது இளைய மகனும் சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொண்டனர், எப்போதும் இடைவெளியோடு இருக்கும் அவர்களிடையே உறவை ஆழமான உறவு ஏற்பட அந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.


மாலை 7.15 மணி | OH MERCY / ROUBAIX, UNE LUMIERE | DIR: ARNAUD DESPLECHIN | FRANCE | 2019 | 119'

கிறிஸ்துமஸ் இரவில் வடக்கு ஃப்ரான்ஸின் மெட்ரோபாலிட்டன் நகரம் களைகட்டியிருக்கிறது. உள்ளூர் காவல் தலைவர் தாவூத் மற்றும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த லூயிஸ் இருவரும் நகரத்தைச் சுற்றிவருகின்றனர். கார்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, மேலும் சில வன்முறைகள் நிகழ்ந்தேறி இருக்கின்றன.

அப்போது கொடூரமான முறையில் ஒரு வீட்டில், மூதாட்டி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். இறந்தவரின் அண்டைவீட்டைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் கைது செய்யப்படுகின்றனர். க்ளாட் மற்றும் மேரி இருவரும் தாங்கள் கொலை செய்யவில்லை என்று கலங்கித் தவிக்கின்றனர். தாவூத் தலைமையில் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் முடிவில் ஓர் அதிர்ச்சிகரமான உண்மை வெளிவருகிறது...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x