Published : 15 Dec 2019 11:27 AM
Last Updated : 15 Dec 2019 11:27 AM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.16 | படக்குறிப்புகள்

காலை 10.45 மணி | DOLLYBIRDS / CSINIBABA | DIR: PETER TIMAR | HUNGARY | 1997 | 100'

1962 கோடையில் கம்யூனிஸ்ட் ஹங்கேரியில் நடக்கும் கதை. ஹங்கேரியின் கம்யூனிஸ்ட் ஆட்சி சகாப்தத்தின் மிகைப்படுத்தப்பட்ட இசை பகடி இப்படம். நிறைய பாடல்கள். அனைத்தும் கம்யூனிஸ்ட் ஆட்சியின் காலகட்டம், சிந்தனை முறைகள், பிரச்சாரம் ஆகியவற்றை விமர்சனம் செய்யக்கூடியவை. இதனிடையே ஒரு கதை. டீன் ஏஜ் அட்டிலா (சாண்டோர் அல்மாசி) ஒரு திறமை போட்டியைப் பற்றி அறிந்துகொள்கிறார், இரும்புத் திரைக்கு வெளியே செல்ல ஒரு அரிய வாய்ப்பு. ஹெல்சின்கியில் நடைபெறும் சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ள செல்கிறார். அட்டிலாவின் பெரும்பாலான நண்பர்கள் பரிசை வெல்வதற்கு சமமான திறமையில் உள்ளவர்கள் என்றாலும், முதல் பரிசை வெல்வதற்கான தகுதியுடையவராக அடிலா இருக்கிறார்.

பகல் 1.00 மணி | STORIES@8 / KATHAAH@8 | DIR: SHILPA KRISHNAN SHUKLA | SINGAPORE | 2019 | 90'

8 வெவ்வேறு கதைகளின் தொகுப்பு. காதல், ஏக்கம், இழப்பு, கண்ணீர், பயம், நம்பிக்கை, கனவுகள் என வெவ்வேறு உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ள 8 மொழிகளில் கதைகள் அவை. ஒரே இரவில் ஒரே நாட்டில் நடக்கும் கதை இது.

பிற்பகல் 3.00 மணி | ADAM AND EVELYN | ADAM UND EVELYN | DIR: ANDREAS GOLDSTEIN | GERMANY | 2018 | 100'

இன்கோ சுகுல்சோ எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். கிழக்கு ஜெர்மனியில் 1989 கோடைக்காலம். ஆடம் ஒரு தையல்காரராகவும், ஈவ்லின் சர்வராகவும் பணியாற்றுகிறார். அவர்கள் ஒன்றாக விடுமுறைக்கு வெளியே செல்ல திட்டமிடுகின்றனர். ஆடம் தன்னை ஏமாற்றுவதை ஈவ்லின் கண்டுபிடித்தபோது விடுமுறைக்கு தான் மட்டும் வெளியேற முடிவு செய்கிறாள்.

மாலை 5.30 மணி | ASIMMETRY / ASIMETRIJA | DIR: MASA NESKOVIC | SERBIA | 2019 | 93'

ஒரு இளைஞனும் ஒரு இளம்பெண்ணும் தங்களின் கோடை விடுமுறையின் கடைசி நாட்களை மகிழ்வுடன் கழித்துக் கொண்டிருக்கின்றனர். அப்பெண் நாட்டை விட்டு செல்ல வேண்டிய நேரம் நெருங்குகிறது. அவர்களின் முதல் சந்திப்பு ஒரு பழைய கட்டிடத்தின் சுவரினூடே நிகழ்கிறது. மிக விரைவில் அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அவர்கள் இரிவரும் சேர்ந்து நகரத்தை சுற்றுகையில் அவள் குழந்தையாக மாறுகிறாள், அந்த இளைஞனுக்கு அவர்கள் ஏற்கெனவே சந்தித்திருப்பதாக தோன்றுகிறது.

மாலை 8.00 மணி | 4 X 4 | DIR: MARIANO COHN | ARGENTINA / SPAIN | 2019 | 90'

4x4 அளவிலான ஒரு கார் (பிக்கப் ட்ரக்) பூனோஸ் ஆரிஸ் நகரத்தில் மக்கள் வாழும் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து கிடைப்பதை எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு திருடன் உள்ளே நுழைகிறான். ஆனால் அவன் வெளியேற முயற்சிக்கும் போது காரின் வண்டியின் கதவுகள் மூடிக்கொள்கின்றன. அதிலிருந்து வெளிய வர முயற்சிக்கும் அவனது போராட்டங்களே கதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x