

காலை 9.30 மணி | JYESHTHO-PUTRO | DIR: KAUSHIK GANGULY | BENGALI | 2019 | 126'
ஜ்யேஷ்டோபுட்ரோ என்ற இத்திரைப்படம் இந்திரஜித் என்பவர் தனது சொந்த சுயத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடரும் ஒரு பயணம். பிரபலமான டோலிவுட் நட்சத்திரமான இந்திரஜித், தந்தையின் திடீர் மறைவுக்குப் பிறகு தனது சொந்த கிராமமான பல்லபூருக்குத் திரும்புகிறார். அவர் வந்தவுடன், குடும்பத்திற்குள் மறைக்கப்பட்ட சிக்கல்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. 10 நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த கிராமத்திற்கு வரும் இளைஞருக்கு நிறைய ஏமாற்றங்கள். முன்புபோல யாரிடமும் பழகமுடியாத எங்கும் செல்லமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கவனிக்கிறார். இருப்பினும், அவர் பழைய நினைவுகளால் ஏங்குகிறார். இந்த 10 வருடங்களில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அவரது சூழலில் மட்டுமல்ல. எனினும் அவருக்கும் இது ஏற்பட்டுள்ளது.
பகல் 12.00 மணி | THE DAY AFTER I'M GONE | DIR: NIMROD ELDAR | ISRAEL | 2019 | 98'
யோரம் டெல் அவிவில் உள்ள ஒரு சஃபாரி பூங்காவில் கால்நடை மருத்துவர். மனைவியின் பிரிவால் வாடும் அவர் தனது 17 வயது மகளுடன் வாழ்கிறார். தனது மகளைவிட அவருக்கு வன விலங்குகள்தான் முக்கியம். நோய்வாய்ப்பட்ட விலங்குகளை அறுவை சிகிச்சை செய்வார். காயம்பட்ட புலிகளுக்குக்கூட நன்றாக சிகிச்சை அளித்து அதை நன்றாகக் கவனித்துக்கொள்வார், அதேநேரம் கால்நடை மருத்துவர் யோராம் தனது டீனேஜ் மகள் ரோனியை சரியாக கவனித்துக் கொள்ளாதததன் விளைவையும் அவர் சந்திக்க நேரிடுகிறது.
மாலை 3.00 மணி |
தமிழ்த் திரைப்படம்: ஒத்த செருப்பு சைஸ் 7
மாலை 6.00 மணி
தமிழ்த் திரைப்படம் 'கண்ணா'