Published : 14 Dec 2019 03:50 PM
Last Updated : 14 Dec 2019 03:50 PM

சென்னை பட விழா | கேஸினோ  | டிசம்.15 | படக்குறிப்புகள்

காலை 9.45 மணி | ALICE / ALICE | DIR: JOSEPHINE MACKERRAS | FRANCE | 2019 | 103'

ஆலிஸ் தனது அன்பான கணவர் மற்றும் ஒரு சிறிய மகனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். திடீரென எல்லாம் தலைகீழாக மாறுகிறது. அவரது கணவர் ஆலிஸ் சேமிப்பிலிருந்து எல்லா பணத்துடனும் காணாமல் போகிறார், மேலும் வீடு அடமானத்தில் உள்ளதால் தனது குடியிருப்பில் இருந்து வெளியேறவேண்டிய நிலை. தனது வீட்டைக் காப்பாற்ற அவள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அதிக அளவு பணம் தவணைமுறையில் செலுத்தியாக வேண்டும். ஆலிஸால் அவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது. ஆனால் அதற்கும் ஒரே ஒரு வழி இருக்கிறது, அது மேல்தட்டு பாலியல் தொழிலாளியாக ஆலிஸ் மாற வேண்டியதுதான். எல்லாவற்றிலிருந்தும் மீள்வதற்காக அவர் என்ன செய்கிறார்? எமிலி பெப்போனியர் ஆலிஸ் எனும் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ள படம் இது.


பகல் 12.15 மணி | JUST 6.5 / METRI SHESH VA NIM | DIR: SAEED ROUSTAYI | IRAN | 2019 | 131'

போதைமருந்து கேங்ஸ்டர் நாசர் கக்ஸாத்தைப் பிடிக்க முயலும் போலீஸ் தேடுதல் பணியில் ஈடுபடுகின்றனர். இறுதியாக போராடி அவனை நெருங்கி விடுகின்றனர். எனினும் அவன் தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தப்பிக்க முயற்சி செய்கிறான். அவனது முன்னாள் வருங்கால மனைவி, அவன் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறார். போலீஸிடம் சிக்கிய நஸார் காக்ஸாத் சிறையிலிருந்து வெளியேறுவதற்கும் மரண தண்டனையைத் தவிர்க்கவும் முயற்சி செய்கிறான்.


பகல் 2.45 | BIKEMAN / BIKEMAN SAKKARIN TOODMUEK | DIR: PRUEKSA AMARUJI | THAILAND | 2018 | 106'

சாக்கரின் 25 வயது வேலையில்லாத இளைஞர். ஆனால் அவரது தாய்க்கு மகனை எப்படியாவது வங்கிப்பணியில் அமர்த்த வேண்டும் என்ற விருப்பம். அதன் மூலம் தனது மகனை மட்டுமல்லாமல், தன்னையும், குடும்பத்தையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வான் என எண்ணுகிறாள். இதனால் தனது தாயின் மகிழ்ச்சிக்காக வங்கியில் வேலை கிடைத்து விட்டதாக கூறி அதற்குரிய சீருடையை அணிந்து வேலைக்குச் செல்கிறார் சாக்கரின்.


மாலை 4.45 மணி | CHARCOAL | KOMUR | DIR: ESMAEEL MONSEF | IRAN / 2019 | 90'

ஈரானிய மாகாணமான அஜர்பைஜானில் ஒரு எல்லை கிராமத்தில் கரி தயாரிக்கும் கெய்ராட்டின் கதையை சார்க்கோல் விவரிக்கிறது. கிராமப்புற வடமேற்கு ஈரான் பகுதியான அந்த மாகாணத்தில் தனது தொழிலே மூச்சென வாழும் அவர் நிறைய அவமானங்களை சந்திக்கிறார். அவரது மகன் சிறையில் அடைக்கப்பட்டு, அஜர்பைஜானுக்குத் தப்பித்தபின் ஒரு துன்பகரமான சுழலுக்குள் தள்ளப்படுகிறார்.

மாலை 7.00 மணி | A SON | BIK ENEICH: UN FILS | DIR: MEHDI BARSAOUI | TUNISIA | 2019 | 130'

துனிசியாவில் கோடை 2011 காலகட்டம். மெரீமும் அவரது 10 வயது மகன் அஸிஸும் கும்பல் தாக்குதலில் தற்செயலாக சுடப்படுகிறார்கள். அஸுக்கு கல்லீரலில் காயம் ஏற்படுகிறது. அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்போது மிகப்பெரிய ரகசியம் ஒன்று வெளிப்படுகிறது. தான் இதுவரை தந்தை என எண்ணி வந்த நபர் உயிரியல் ரீதியாக தனது தந்தை இல்லை என்ற விவரம் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது திரைப்படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x