Published : 14 Dec 2019 03:46 PM
Last Updated : 14 Dec 2019 03:46 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.15 | படக்குறிப்புகள்


காலை 10.45 மணி | A THORN UNDER THE FINGERNAIL / TUSKE A KOROM ALATT | DIR: SAMDOR SARA | HUNGARY | 1987 | 92'

ஹங்கேரியின் மிகச்சிறந்த நடிகரான செர்சால்மி ஜார்ஜி நடித்துள்ளார். ஓவியர் ஹடோசி சூழ்ச்சிகளிலிருந்தும் அவதூறுகளிலிருந்தும் தப்பிக்க ஹார்டோபாகியில் ஒரு குக்கிராமத்திற்கு செல்கிறார். அவர் மோதல் சூழ்நிலையில் சிக்குகிறார், அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழலை எதிர்த்துப் போராடுவதால் அவர் ஒரு பிரச்சனையாளராகக் கருதப்படுகிறார். காதல், சஸ்பென்ஸ் என்பதைத் தாண்டி படத்தில் உள்ள ஏராளமான தத்துவ உரையாடல்கள் படத்தின் நோக்கத்தை உயர்த்துகின்றன.

பகல் 1.00 மணி | PSYCHOBITCH | PSYCHOBITCH | DIR: MARTIN LUND | NORWAY | 2019 | 106'

பள்ளியில் பயிலும் இரு மாணவர்களுக்கு இடையே நடக்கும் நட்பும், காதல் குறித்த கதை. நார்வே நாட்டில் ஜோவிக் என்ற சிறிய நகரில் கதை தொடங்குகிறது.

15 வயது மாணவி ஃபிரிடா தன்னை வகுப்பில் சிறந்த மாணவி, நன்றாகப் படிப்பவர் என்று எண்ணி வாழ்கிறார். வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஃபிரிடா திறமையைக் கண்டு வியக்கிறார்கள். அந்த வகுப்புக்கு மரியஸ் என்ற மாணவர் புதிதாக வருகிறார். மரியஸும், ஃபிரிடாவுக்கு இணையாக நன்றாக படிக்கிறார், புத்திசாலித்தனமாக நடக்கிறார். இதனால், தனக்கு போட்டியாக மரியஸ் வந்துவிட்டானோ என்று ஃபிரிடா நினைக்கிறார். ஆனால், ஃபிரிடாவை மரியஸுக்கு மிகவும் பிடித்துப் போகிறது. அவள் செய்யும் பல்வேறு தொந்தரவுகளையும், இடர்ளையும் தாங்கிக்கொள்கிறான். இருவரும் ஒன்றாக படிக்கத் தொடங்குகின்றனர். ஃபிரிடாவுடன் பழங்கும் காலத்தில் மரியஸுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கிறது. இருவரும் மனதளவில் ஒன்றிணைந்தார்களா, நட்பு தொடர்ந்ததா என்பதை வேடிக்கையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.


பிற்பகல் 3.00 மணி | JWLWI | THE SEED | DIR: RAJINI BASUMATARY | BODO, ASSAMESE | 2019 | 90'

ஒரு நம்பிக்கையின் கதையை முன்வைக்கிறது ஜ்வ்ல்வி. தீர்க்கமுடியாத முரண்பாடுகளைக் கூட தீர்க்கமான விடாமுயற்சியின் மூலம் விடைகாணலாம் என இப்படம் வலியுறுத்துகிறது. 90 களில் தொடங்கி ஒரு பத்தாண்டு காலம் அசாமில் இயங்கி வந்த கிளர்ச்சிக்குழுக்கள் அரசாங்கத்தால் அடக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம் அலாரியுடையது. இந்திய ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அலாரியின் கணவர் கொல்லப்படுகிறார். தன் சிறு மகனுடன் எப்படியோ சமாளித்து போராடி வாழ்வை தக்கவைத்துக்கொள்ளும் அலாரிக்கு புதுப் பிரச்சனை ஒன்று உருவாகிறது. அது கல்லூரியிலிருந்து திரும்பும் மகனால் ஏற்படுகிறது. பெரும்பான்மை அரசுக்கு எதிராக அடையாளங்களை மீட்கும் கிளர்ச்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுடன் மீண்டும் உயிர்த்தெழுகிறது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் கவர்ச்சிகரமான புரட்சிகர சித்தாந்தங்களில் ஈடுபட்டு சமூக புதிரில் சிக்கும் இளைஞர்கள் எவ்வாறு பலியாகிறார்கள் என்பதை சித்தரிக்க முயற்சிக்கிறது.


மாலை 5.30 மணி | THE GROUND BENEATH MY FEET / DER BODEN UNTER DEN FUBEN | DIR: MARIE KREUTZER | GERMANY | 2019 | 108'

கார்ப்பரேட் அலுவலகங்களுக்கான வணிக ஆலோசகர் லோலா. அவள் தனது வேலையில் வருமானத்தை மேம்படுத்த சிறப்பான ஆர்வத்தைக் காட்டுகிறாள். தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவளது ஈடுபாடு ஒருவித கறார் தன்மையுடன் அமைகிறது. ஆனால் கடந்த கால துன்பகரமான சம்பவம் ஒன்று அவளது வாழ்க்கையில் மீண்டும் கட்டாயப்படுத்தும்போது, லோலாவின் யதார்த்தத்தின் மீதான பிடி நழுவுகிறது.


மாலை 8.00 மணி | F20 | DIR: MIRIAM BLIESE | GERMANY | 2019 | 97'


மார்டினா, பிட்ஸா டெலிவரி வேலை செய்யும் இளம் பெண். எப்போதும் வீடியோகேம் விளையாடிக்கொண்டிருக்கும், பிட்ஸா சாப்பிடும் ஃபிலிப் என்பவனை காதலிக்கிறாள். பார்டி பீச்சுக்கு செல்ல தனது அப்பாவின் பணத்தை திருடவேண்டும் என்று ஃபிலிப்பை சம்மதிக்க வைக்கிறாள். ஆனால் அதன் பிறகு எல்லாம் ரத்தம் நிறைந்த கெட்ட கனவாக மாறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x