சென்னை பட விழா | தேவி | டிசம்.15 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | தேவி | டிசம்.15 | படக்குறிப்புகள்
Updated on
2 min read

காலை 11.00 மணி | ORGAN | ANO HI NO ORUGAN | DIR: EMIKO HIRAMATSU | JAPAN | 2019 | 120'

ஆர்கான், 2-ம்உலகப் போரின்போது அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசியதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ நகரத்தின் மீது அமெரிக்க ராணுவம் குண்டுமழை பொழிகிறது. ஏராளமானோர் உயிரிழக்கிறார்கள். டோக்கியோ நகருக்கு வெகு தொலைவில் காடி இட்டாகுரா, மிட்சு நோமியா இரு பெண்களும் சேர்ந்து குழந்தைகளுக்கான பள்ளி நடத்தி வருகின்றனர்.
அமெரி்க்காவின் தாக்குதல் தங்கள் கிராமத்தை நெருங்குவதை அறிந்து தங்களின் பாதுகாப்பில் இருக்கும் குழந்தைகளை எவ்வாறு காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை. ஜப்பானின் இயற்கை அழகு, கிராமத்தின் பழக்கங்கள், குறும்பு ஆகியவற்றை அழகாக படமாக்கப்பட்டுள்ளது. இரு பெண்களும் சேர்ந்து அந்தக் குழந்தைகளை எவ்வாறு பாதுகாத்தனர்?


பிற்பகல் 2.00 மணி | PARASITE / GISAENGCHUNG |DIR: JOON-HO BONG | SOUTH KOREA | 2019 | 132'

கிம் கி வூ மற்றும் அவரது குடும்பமும் வறுமையில் வாடுகின்றனர். பீட்சா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு அட்டைப் பெட்டிகள் மடித்துக் கொடுப்பதே அவர்களின் பிரதான வேலை. அருகிலுள்ள காஃபி ஷாப்பிலிருந்து வைஃபை திருடுவது, தங்களுடைய நோய் பக்கத்து வீட்டுக் காரர்களுக்கும் தொற்றவேண்டும் என்று தங்கள் வீட்டு ஜன்னல்களை திறந்து வைப்பது என அவர்களது வாழ்க்கை கழிகிறது. ஒரு பெண்ணுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்க வேண்டி நண்பர் மூலம் வரும் வாய்ப்பினால் கி கி வூவின் வாழ்க்கை மாறுகிறது.

மாலை 4.30 மணி | DIVINE LOVE / DIVINO AMOR | DIR: GABRIEL MASCARO | BRAZIL | 2019 | 132'

எதிர்கால பிரேசிலில், வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் கிறிஸ்துவ மதம் இணைந்துள்ள காலகட்டம். 42 வயதான பெண் வழக்கறிஞர், விவாகரத்து வேண்டி தன்னிடம் வரும் தம்பதிகளுக்கு ஆலோசனை கொடுத்து சேர்த்து வைக்கிறார். கணவன் மீது அபரிமிதமான காதல் கொண்டு, அவன் மூலம் குழந்தை பெற்று வளர்க்க நினைக்கிறாள். இந்த வேளையில் அவளது திருமணத்தில் பெரிய பிரச்சினை வெடிக்கிறது. இது அவளை கடவுளுக்குப் பக்கத்தில் கொண்டு வருகிறது.

மாலை 7.00 மணி | HEARTS AND BONES / HEARTS AND BONES | DIR: BEN LAWRENCE | AUSTRALIA | 2019 | 111'

ஒரு போர் புகைப்படக் கலைஞரான ஹூகோ வீவிங் மற்றும் அகதி ஆந்த்ரே லூரி இருவரையும் அச்சுறுத்தும் புகைப்படம் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றனர். அந்தப் புகைப்படம் கிராம கண்காட்சியில் இடம்பெறப் போவதுதான் உச்சபட்ச பிரச்சினை.... இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பென் லாரன்ஸ் ஒரு அறிவார்ந்த, தார்மீக சிக்கலான மற்றும் ஆழமாக நகரும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in