Published : 14 Dec 2019 09:27 AM
Last Updated : 14 Dec 2019 09:27 AM

‘ஜீ திரை’ - புதிய சேனல்

ஜீ தமிழ் சேனலின் அங்கமாக ‘ஜீ திரை’ என்ற புதிய சேனல் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து சேனல் தரப்பில் கூறியதாவது: நெடுந்தொடர், ரியாலிடி நிகழ்ச்சிகள் வழியே நேயர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் ஜீ தமிழ் சேனல் தனது மற்றொரு அங்கமாக சினிமா சேனல் ஒன்றை வரும் 2020-ல் தொடங்க உள்ளது. இதில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். ஜீ தமிழ் சேனல் சார்பில் முதல்முறையாக ‘ஜீ சினி விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வரும் ஜனவரி 4-ம் தேதி நடக்க உள்ளது. புதிய சேனல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அன்று வெளியிடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x