Published : 13 Dec 2019 02:38 PM
Last Updated : 13 Dec 2019 02:38 PM

CIFF-ல் டிசம்பர் 14 அன்று என்ன படம் பார்க்கலாம்? - நந்தினி வெள்ளைச்சாமி பரிந்துரைகள்

POTRAIT OF A LADY ON FIRE | FRANCE | 2019 | தேவி, பிற்பகல் 2.00 மணி |

18-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் அது. இளம் ஓவியர் மரியன், தனது மாணவர்களுக்கு வரைவது குறித்து வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அவளின் மாணவர், மரியனின் ஓவியம் குறித்துக் கேள்வி எழுப்புகிறார். கடந்த காலத்துக்குள் மூழ்குகிறாள் மரியன். ஃப்ரான்ஸ் தீவொன்றுக்கு ஹலோயீஸ் என்னும் இளம்பெண்ணை ஓவியம் வரையச் செல்கிறாள் மரியன். தன்னை வரைவதில் விருப்பமில்லாத ஹலோயீஸ் மறுப்புத் தெரிவிக்கிறாள். அவளுடன் மரியன் அன்பாகப் பழகுகிறாள். இருவரின் நட்பு அடுத்தகட்டத்துக்குச் செல்கிறது. குகையொன்றுக்கு நடைபயணம் செல்பவர்கள், முதல்முறையாக முத்தமிட்டுக் கொள்கின்றனர்... இப்படியாகச் செல்லும் மரியனின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படுகிறது... அது..

AMARE AMARO |ITALY | 2018 | தேவிபாலா , மாலை 5.30 மணி

கேடானோ சராசரியான அமைதியான இளைஞன். தனது தந்தையுடன் வசித்து வரும் கேடானோ தனது குடும்ப பேக்கரியை தனியாக கவனித்து வருகிறார். அவருடைய பேக்கரி பொருட்கள் அவர் வசிக்கும் கிராம மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்பட்டாலும், பிரெஞ்சு தந்தைக்கும் இத்தாலி தாய்க்கும் பிறந்த அவரை கிராமம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கேடானோவின் சகோதரர் குற்ற சம்பவத்தில் இறக்க அவரது இறுதி சடங்கை கிராமத்தில் நடத்த கிராமம் தடைவிதிக்கிறது. கிராமத்தின் எதிர்ப்பை மீறி கேடானோ தனது சகோதரை தனது தாயின் சமாதியின் அருகில் புதைக்கிறாரா என்பதை த்ரில்லிங்காக கூறுவதே அமரே அமரோ.

THE CANNIBAL CLUB | BRAZIL | 2018 | அண்ணா, காலை 9:30 மணி

அடேவியோவும், கில்டாவும் பிரேசிலிய மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பணக்கார தம்பதிகள். அடேவியோ ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் துரதிர்ஷ்டவசமான அப்பாவி பணியாட்களை தின்னும் பழக்கம் தம்பதிகளுக்கு உண்டு. அடேவியோ, தி கானிபால் க்ளப் எனப்படுகிற நர மாமிசம் உண்ணுபவர்களின் குழுவில் உறுப்பினராக இருக்கிறான். அந்த குழுவின் தலைவனும், செல்வாக்கான அரசியல்வாதியுமான போர்ஜெஸ்ஸைப் பற்றிய ரகசியம் ஒன்று கில்டாவுக்குத் தெரியவருகிறது. இதனால் தம்பதிகளின் உயிருக்கு ஆபத்து உருவாகிறது.

CARGA | PORTUGAL | 2018 | கேஸினோ, காலை 9.45 மணி

சட்டவிரோத குடியேறிகள் சிலரை ஏற்றிக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து போர்ச்சுகலுக்கு ட்ரக் ஒன்று புறப்படுகிறது. அமைதியான வாழ்வை தேடி அவர்களது வாழ்வில் திடீர் ஏற்படுகிறது. ஆண்கள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் பலவந்தம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களில் விக்டோடியா என்ற இளம்பெண் அவர்களை துணிச்சலுடன் எதிர்க்கிறாள். ப்ரூனோ காஸ்கன் இயக்கியுள்ள இந்த படம் உலகமெங்கும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது.

BEANPOLE | RUSSIA | 2019 | கேஸினோ, மாலை 7.00 மணி

1945ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போரின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது லெனிங்க்ராட் நகரம். மக்கள் அனைவரும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்கதியாகியுள்ளனர். வரலாற்றின் கருப்பு பக்கங்களை கொண்ட அந்த நிகழ்வு ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. உயிர் பிழத்த மக்கள் இடிபாடுகளிலிருந்து தங்கள் வாழ்க்கையை துவங்குகிறார்கள். அவர்களின் மத்தியில் இருக்கும் இயா மற்றும் மாஷா இருவரை சுற்றி நிகழும் கதையே பீன்போல்.

THE WARDEN | IRAN | 2019 | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி, மாலை 7.00 மணி

1960களில் ஷா ஆட்சியின் காலக்கட்டம். நகரில் ஒரு புதிய விமான நிலையம் அமைகிறது. அதற்கான ஓடுபாதை விமான நிலையத்திற்கு அதேநிலத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சிறைச்சாலையை இடித்துத் தள்ள திட்டமிடுகிறார்கள். இதனால் அங்குள்ள சிறைக்கைதிகள் தெற்கு ஈரானில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்படுகிறார்கள். சிறைச்சாலையின் வார்டனான மேஜர் ஜாகேத், கைதிகளை புதிய சிறைக்கு மாற்றும் பொறுப்பை ஏற்கிறார். அவரையே ஏமாற்றிவிட்டு மரணத் தண்டனை கைதி ஒருவன் எப்படித் தப்பிக்கிறான்? இப்பிரச்சினை காவல்துறையின் செயல்பாட்டின் அவசரத்தை கோருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x