Published : 13 Dec 2019 02:22 PM
Last Updated : 13 Dec 2019 02:22 PM

சென்னை பட விழா | கேஸினோ  | டிசம்.14 | படக்குறிப்புகள்

காலை 9.45 மணி | CARGA / CARGA | DIR: BRUNO GASCON | PORTUGAL | 2018 | 113'

சட்டவிரோத குடியேறிகள் சிலரை ஏற்றிக்கொண்டு கிழக்கு ஐரோப்பாவிலிருந்து போர்ச்சுகலுக்கு ட்ரக் ஒன்று புறப்படுகிறது. அமைதியான வாழ்வை தேடி அவர்களது வாழ்வில் திடீர் ஏற்படுகிறது. ஆண்கள் கொல்லப்படுகின்றனர். பெண்கள் பலவந்தம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களில் விக்டோரியா என்ற இளம்பெண் அவர்களை துணிச்சலுடன் எதிர்க்கிறாள். ப்ரூனோ காஸ்கன் இயக்கியுள்ள இந்த படம் உலகமெங்கும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது.

11 wins & 23 nominations


பகல் 12.15 மணி | SONG WITHOUT A NAME / CANSION SIN NOMBRE | DIR: MELINA LEON | PERU / SPAIN / USA / CHILE | 2019 | 97'


1980களில் பெரு நாட்டில் அரசியல் களேபரங்கள் நடந்து கொண்டிருந்த காலகட்டம். ஜார்ஜியானா என்ற இளம்பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. போலி மகப்பேறு மையத்தில் பிறந்த அந்த பச்சிளம் குழந்தை திடீரென காணாமல் போகிறது. தொலைந்து போன தன் குழந்தையை தேடியலையும் ஜார்ஜியானா ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு செல்கிறாள். அங்கு தான் சந்திக்கும் பெட்ரோஸ் கேம்போஸ் எனப்படும் ஒரு பத்திரிகையாளரின் உதவியோடு குழந்தையை தேடும் பணியை தொடர்கிறாள். இறுதியில் ஜார்ஜியானா தனது குழந்தையுடன் இணைந்தாளா? என்பதே மீதிக்கதை. மெலினா லியோன் இயக்கியுள்ள இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

15 wins & 11 nominations

பகல் 2.45 | BEFORE I FORGET / ANTES QUE EU ME ESQUECA | DIR: TIAGO ARAKILLAN | BRAZIL | 2018 | 95'

80 வயதான ஓய்வுபெற்ற நீதிபதி பொலிடோரோ தனது சவுகரியமான, நிலையான ஓய்வு வாழ்க்கையை மாற்ற நினைக்கிறார். ஒரு ஸ்ட்ரிப் க்ளப்பின் (strip club) இணை உரிமையாளராக மாறுகிறார். இது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. இது அவரது மனநிலையை கேள்விக்குள்ளாக்கி சட்ட ரீதியான பிரச்சினையாகவும் மாறுகிறது. நகைச்சுவைப் படமாக இருந்தாலும் வயதாகுதல், உறவுகள், குடும்பத்தின் எதிர்பார்ப்புகள் ஆகிய விஷயங்களை இந்தப் படம் பேசுகிறது.


மாலை 4.45 மணி | QUEEN OF HEARTS | DRONNINGEN | DIR: MAY EL THOUKY | DENMARK / SWEDEN | 2019 | 127'

தனது கணவரின் முதல் மனைவியின் பதின்ம வயது மகனுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைக்கும் ஒரு பெண் தனது குடும்ப வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் சீர்கேட்டுக்கு ஆளாக்குகிறாள். இனி சரி செய்ய முடியாத, மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள்.

9 wins & 10 nominations


மாலை 7.00 மணி | BEANPOLE / DYLDA | DIR: KANTEMIR BALAGOV | RUSSIA / USQA | 2019 | 130'

1945ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போரின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது லெனிங்க்ராட் நகரம். மக்கள் அனைவரும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்து நிர்கதியாகியுள்ளனர். வரலாற்றின் கருப்புப் பக்கங்களை கொண்ட அந்த நிகழ்வு ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. உயிர் பிழைத்த மக்கள் இடிபாடுகளிலிருந்து தங்கள் வாழ்க்கையை துவங்குகிறார்கள். அவர்களின் மத்தியில் இருக்கும் இயா மற்றும் மாஷா இருவரை சுற்றி நிகழும் கதையே பீன்போல்.

15 wins & 11 nominations.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x