Published : 13 Dec 2019 02:18 PM
Last Updated : 13 Dec 2019 02:18 PM

சென்னை பட விழா | அண்ணா | டிசம்.14 | படக்குறிப்புகள்

காலை 9.30 மணி | THE CANNIBAL CLUB / O CLUBE DOS CANIBAIS | DIR: GUTO PARENTE | BRAZIL | 2018 | 81'

அடேவியோவும், கில்டாவும் பிரேசிலிய மேல் தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பணக்கார தம்பதிகள். அடேவியோ ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் துரதிர்ஷ்டவசமான அப்பாவி பணியாட்களை தின்னும் பழக்கம் தம்பதிகளுக்கு உண்டு. அடேவியோ, தி கானிபால் க்ளப் எனப்படுகிற நர மாமிசம் உண்பவர்களின் குழுவில் உறுப்பினராக இருக்கிறான். அந்த குழுவின் தலைவனும், செல்வாக்கான அரசியல்வாதியுமான போர்ஜெஸ்ஸைப் பற்றிய ரகசியம் ஒன்று கில்டாவுக்குத் தெரியவருகிறது. இதனால் தம்பதிகளின் உயிருக்கு ஆபத்து உருவாகிறது.

3 wins & 2 nominations


பகல் 12.00 மணி | SUMMER OF CHANGSHA / LIU YU TIAN | DIR: FENG ZU | CHINA | 2019 | 120'

அபின் ஒரு போலீஸ் துப்பறிவாளன். ஒரு வினோதமான கொலை வழக்கை விசாரிக்கும் போது, மருத்துவர் லீ ஸூவை சந்திக்கிறான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமாக, அபின் அந்த மர்மமான பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறான். இரண்டு பேருமே தத்தமது காதல் கதைகளிலும், பாவங்களிலும் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள். இந்த காதல் அந்த பாவங்களுக்கு விமோசனம் தேட உதவுமா?

4 nominations.


பிற்பகல் 2.30 மணி | THE SILENCE OF OM | DIR: LEADING LI | THAIWAN | 2018 | 100'

வன்முறையை ஆயுதமாக கொண்டு வாழும் 'தாதா' குடும்பத்தைச் சேர்ந்தவர் ஓம்-கா. எப்போதும் தனது வாழ்கை முற்றுப்பெற்று விடும் என்ற எண்ணத்துடனேயே அவர் வாழ்க்கையை கழிக்கிறார். ஆனால் பல நேரங்களில் அதிருஷ்டவசமாக சிக்கலில் இருந்து விடுபடும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனாலும் தான் ஒரு ரவுடி என்ற அடையாளத்தில் இருந்து விடுபட முடியுமா என்பது தான் அவரது ஏக்கம். ஆனால் அவரது ஆசையை வன்முறையை வாழ்க்கையாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தையர் ஏன் அவரது நண்பர்கள் கூட பூர்த்தி செய்ய முடியாது. ஆனால் அவரது வாழ்க்கையில் ஜிங் ஜுவான் என்ற பெண் குறுக்கிடுகிறார். இது அவருக்கு புதிய வாழ்க்கையை கொண்டு வருகிறது.

2 wins & 1 nomination

மாலை 4.30 மணி | 4 X 4 | DIR: MARIANO COHN | ARGENTINA / SPAIN | 2019 | 90'

70களில் நடக்கும் கதை. குடும்பம், நண்பர்கள் என ஒரு பிரபல வழக்கறிஞரின் வாழ்க்கை மிகச் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. வெளியூரிலிருந்து ஒரு அந்நியன் அங்கு வருகிறான். அவன் வெளித்தோற்றத்திற்கு அமைதியானவன், துப்பறிவாளன். அவன் வந்தபிறகு வழக்கறிஞர் வாழ்க்கையில் நிறைய சிக்கல்களும் கேள்விகளும் உருவாகிறது. டொராண்டோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பல்வேறு திரைப்பட விழாக்களில் சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் பெற்ற படம்.

மாலை 7.15 மணி | THE LONGEST NIGHT / LA MALA NOCHE | DIR: GABRIELA CALVACHE | ECUDOR / MEXICO | 2019 | 95'

ஒரு அழகிய பெண் விபச்சாரத்தில் தள்ளப்படுகிறாள். அதில் வரும் பணத்தை பெண்களைக் கடத்தும் கூட்டத்தின் தலைவனுக்குத் தர வேண்டும். ஆனால் அவளது பெண்ணின் நோயும், அவளது போதை மருந்து பழக்கமும் அவள் கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்க விடாமல் தடுக்கிறது. ஒரு எதிர்பாராத நிகழ்வு அவளுக்கு விடுதலை தரும் சந்தர்ப்பத்தைத் தருகிறது. .

3 nominations

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x