சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.14 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.14 | படக்குறிப்புகள்
Updated on
2 min read

காலை 10.45 மணி | HIGHLIGHT / HAILLAIT | DIR: ASGHAR NAIMI | IRAN | 2018 | 90'

ஈரானின் வடக்கில் ஒரு ஆணும் பெண்ணும் கார் விபத்துக்குள்ளாகியுள்ளனர் கோமா நிலைக்குச் செல்கிறார்கள். இந்த இருவருக்கும் ஏன் இப்படி நேர்ந்தது. ஏன் ஒன்றாக சேர்ந்தார்கள் என்பது பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. அதுமட்டுமின்றி வடக்கில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி அவர்களின் துணைவர்களுக்கு எதுவும் தெரியாது.

பகல் 1.00 மணி | AMORI | DIR: DINESH P BHONSLE | KONKANI | 2018 | 106'

கோவாவின் கொங்கனி கிராமம் ஒன்றிலிருந்து லண்டனில் குடியேறிய வெளிநாட்டவர் ஷிரிஷ் (52). அவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீடு மற்றும் கிராமத்தை விட்டு வெளியேறினார். ஒருநாள் அவருக்கு சொந்த கிராமத்திற்கு திரும்பி வர வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. உறவினர்களோடு ஏற்பட்ட பிரச்சினைகள் எல்லாம் கண்முன்னே தோன்றுகிறது. என்றாலும் அவர் முறித்துக் கொண்ட குடும்ப உறவுகளை மீண்டும் நல்லவிதமாக அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அதேநேரம் கடந்த காலத்தை முற்றாக புதைக்க வேண்டுமெனில் அவர் ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியை சமாளிக்க வேண்டும்.

பிற்பகல் 3.00 மணி | ARGHYAM | DIR: Y SREENIVAS | KANNADA | 2019 | 114'

இயற்கைக்கு மனிதன் தேவையில்லை, ஆனால் மனிதன் தன் வாழ்க்கைக்கு இயற்கை தேவை. ஆனால் வளர்ச்சியின் பெயரில், நாம் இயற்கையை அழித்து வருகிறோம், மேலும் சுற்றுச்சூழல் சேதத்தின் பேரழிவு விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை ஆர்கியம் திரைப்படம் பேசியுள்ளது. ஒரு சிறிய நகரத்தில் தனது குழந்தைகள் மனைவியுடன் மகிழச்சியுடன் வாழ்ந்துவருகிறார் ராஜீவ் சர்மா. இவர் ஏரியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஈடுபடும்போது அவருக்கு எதிராக நிற்கும் அவரது மனைவி அவரது சுற்றுச்சூழல் சிந்தனைகளை புரிந்துகொண்டாரா? ஏரி மீட்டெடுக்கப்பட்டதா என்பதை அறிமுக இயக்குநர் ஆடிட்டர் சீனிவாஸ் ஒரு குடும்ப நாடகமாக இயக்கியிருக்கிறார்.

மாலை 5.30 மணி | AMARE AMARO / AMARE AMARO | DIR: JULIEN PAOLINI | FRANCE / ITALY | 2018 | 89'

கேடானோ சராசரியான அமைதியான இளைஞன். தனது தந்தையுடன் வசித்து வரும் கேடானோ தனது குடும்ப பேக்கரியை தனியாக கவனித்து வருகிறார். அவருடைய பேக்கரி பொருட்கள் அவர் வசிக்கும் கிராம மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்பட்டாலும், பிரெஞ்சு தந்தைக்கும் இத்தாலி தாய்க்கும் பிறந்த அவரை கிராமம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கேடானோவின் சகோதரர் குற்ற சம்பவத்தில் இறக்க அவரது இறுதிச் சடங்கை கிராமத்தில் நடத்த கிராமம் தடைவிதிக்கிறது. கிராமத்தின் எதிர்ப்பை மீறி கேடானோ தனது சகோதரை தனது தாயின் சமாதியின் அருகில் புதைக்கிறாரா என்பதை த்ரில்லிங்காக கூறுவதே அமரே அமரோ.

1 win & 25 nominations

மாலை 8.00 மணி | THE COMPONENTS OF LOVE / DIE EINZELTELLE DER LIEBE | DIR: MIRIAM BLIESE | GERMANY | 2019 | 97'

சோபியும் ஜார்ஜும் காதலில் விழுகிறார்கள். இந்த நிலையில் தன்னை கைவிட்டு சென்ற முன்னாள் காதலரால் தான் தாயாகி இருப்பது சோபிக்கு தெரிய வருகிறது. ஜார்ஜ் அந்த குழந்தைக்கு தந்தையாக தன்னை மகிழ்ச்சியாக இந்த உலகிறகு அடையாளப்படுத்திக் கொள்கிறார். இந்த நிலையில் நவீனகால பெற்றோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை சோபியும், ஜார்ஜும் எதிர்கொள்கிறார்கள். வேலைக்கு செல்ல இருவரும் விரும்புவதால் குழந்தையை யார் கவனித்துக் கொள்வார்கள் என்ற பிரச்சனை எழுகிறது. இதனை இருவரும் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே தி காம்போனட்ஸ் ஆஃப் லவ் படத்தின் கதை.

2 nominations

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in