சென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.14 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.14 | படக்குறிப்புகள்
Updated on
1 min read

பிற்பகல் 2.00 மணி | GO TO HELL AND TURN LEFT | DIR: CARLO CALDANA | USA | 2018 | 82'

ஓயிப் ஷ்ச்மிபிலிட்ஸ் எனும் ஒரு செவிகேளா ஓவியரின் கதை இது. தனது மனைவியின் மறைவும் குடிப்பழக்கமும் அவரை அலைக்கழிக்கிறது. அவர் தனது முகவரால் ஓர் உளவாளியாக யாரோ ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்கிறார். அங்கு அவரது மனைவி எமிலியைப் போன்ற ஒரு விருந்தினரைக் காண்கிறார். அவர் தவறாக புரிந்துகொண்டாரா அல்லது அங்குள்ளவர்கள்தான் ஏமாற்றுகிறார்களா? அவருக்கு ஒரே குழப்பம். தவறான புரிதல் மற்றும் சூழ்ச்சியின் சூறாவளியில் சிக்குகிறார்.

மாலை 4.00 மணி | STORIES@8 / KATHAAH@8 | DIR: SHILPA KRISHNA SHUKLA | SINGAPORE / INDIA | 2019 | 90'

ஒரு நாட்டுக்குள் ஒரே இரவில் சில மணிநேரங்களில் நடக்கும் கதைகள் இவை. ஒரே நாள் இரவு 8.00 மணிக்கு நிகழும் 8 வெவ்வேறு இந்திய மொழிக் கதைகளின் தொகுப்பு. காதல், ஏக்கம், இழப்பு, கண்ணீர், பயம், நம்பிக்கை, கனவுகள் ஆகியவற்றை நம்முள் கடத்துகிறது படம்.

மாலை 7.00 மணி | PIRANHAS / LA PARANZA DEI BAMBINI | DIR: CLAUDIO GIOVANNESI | ITALY | 2019 | 105'

இளங்கன்று பயமறியாது என்ற கருவை வைத்து உருவாக்கப்பட்டதுதான் 'பிரான்ஹாஸ்'. இந்த திரைப்படத்தை கிளாடியோ கோவானிஸ் இயக்கியுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியன பிரான்ஹாஸ் திரைப்படம் பெர்லினில் நடந்த கோல்டன் பியர் 69-வது சர்வதேச திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறந்த திரைக்கதைக்கு சில்வர் பியர் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் ராபர்ட்டோ சேவியானாவின் “தி பாய் பாசஸ் ஆப் நேப்பிள்ஸ்” என்ற புகழ்ெபற்ற நாவலை தழுவி திரைப்படம் எடுக்கப்பட்டது. நேப்பிள் நகரம் அருகே இருக்கும் சானிடா நகரைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் நிகோலா, லிடிஜியா. இருவரும் சிறந்த நண்பர்கள். பதின்மவயதுக்கு ஏற்றார்போல் நகரை நண்பர்களுடன் வலம் இருவரும் சாவு, சிறை குறித்த அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். நகரை எளிதாக வசப்படுத்தி பணம் ஈட்ட வேண்டும் என்ற தீராத வேட்கையில் துப்பாக்கி, கொள்ளை எனும் தவறான பாதைக்கு இருவரும் செல்கின்றனர். கிரிமினல் செயல்களால் பணம் கொட்டுகிறது, நண்பர்கள் இருவரும் தங்களை மறந்து செலவுசெய்து சொகுசாக வாழ்கிறார்கள். இரு நண்பர்களும் இரு பெண்களை காதலித்தபோதும் தங்களின் கிரிமினல் செயலை விட்டுவிட மறுக்கிறார்கள். நல்லவை எது கெட்டவை எனத் தெரியாமல் சொகுசு வாழ்க்கையில் வாழும் இருவரும் திருந்தினார்களா என்பதுதான் கதை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in