Published : 12 Dec 2019 03:25 PM
Last Updated : 12 Dec 2019 03:25 PM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.13 | படக்குறிப்புகள்

காலை 10.45 மணி | DEAR EMMA, SWEET BOBE / EDES EMMA, DRAGA BOBE VAZLATOK AKTOK | DIR: ISTVAN SZABO | HUNGARY | 1992 | 90'

எம்மா மற்றும் போபே ஆகிய இரு பெண்களின் கதை இது. இருவரும் தங்கள் நெருக்கமான வாழ்க்கைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். முந்தைய ஆட்சியில் கடின உழைப்பில் தங்களுக்கென்று ஒரு இடத்தை அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இப்போது அதுவே பெரும் பிரச்சினையாகியுள்ளது. அவர்கள் தங்கள் இடத்தை இழந்து மீண்டும் கிராமப் பெண்களாக மாற விரும்பவில்லை.

பகல் 1.00 மணி | THE DAY AFTER I'M GONE | DIR: NIMROD ELDAR | ISRAEL, FRANCE | 2019 | 98'

யோரம் டெல் அவிவில் உள்ள ஒரு சஃபாரி பூங்காவில் கால்நடை மருத்துவர். மனைவியின் பிரிவால் வாடும் அவர் தனது 17 வயது மகளுடன் வாழ்கிறார். தனது மகளைவிட அவருக்கு வன விலங்குகள்தான் முக்கியம். நோய்வாய்ப்பட்ட விலங்குகளை அறுவை சிகிச்சை செய்வார். காயம்பட்ட புலிகளுக்குக்கூட நன்றாக சிகிச்சை அளித்து அதை நன்றாகக் கவனித்துக்கொள்வார், அதேநேரம் கால்நடை மருத்துவர் யோராம் தனது டீனேஜ் மகள் ரோனியை சரியாக கவனித்துக் கொள்ளாதததன் விளைவையும் அவர் சந்திக்க நேரிடுகிறது.

பிற்பகல் 3.00 மணி | SCREENPLAY OF AN INDIAN LOVE STORY | DIR: K.L.PRASAD | TELUGU | 2019 | 128'

கவுதம் என்ற திரைப்பட இயக்குனர் தனது முதல் படத்தை வெளியிட தயாராகி வருகிறார். படத்தின் தணிக்கை மற்றும் விளம்பரங்கள் போன்ற கடைசி நிமிட மன அழுத்தத்தில் இருக்கிறார். தனது வாழ்க்கையின் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறார். கல்லூரி காலத்திலிருந்தே 8 ஆண்டுகளாக காதலித்து வந்த அவருடைய மனைவி ராதிகா, திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறாள். அவளுக்கு உடனடியாக விவாகரத்து வேண்டுமாம். இதை குறித்து பொதுவெளியில் பகிரங்கமாக அறிவிக்கப்போகிறாளாம். எந்தவொரு மோசமான பிரச்சனையும் திரைப்பட வெளியீட்டை பாதிக்கும் என்று இயக்குநர் கருதுகிறார். இன்னும் ஒருநாள் கடந்த பிறகு எந்த முடிவை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும்படி இயக்குநர் மனைவியிடம் மிகவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறார். ஆனால் மனைவி காத்திருக்க தயாராக இல்லை. விவாகரத்து கோரி, உடனடியாக ஆவணங்களில் கையெழுத்திடச் சொல்கிறார் அவரது மனைவி.

மாலை 5.30 மணி | SONS OF DENMARK / DANMARKS SøNNER | DIR: ULAA SALIM | DENMARK | 2019 | 120'

2025 டென்மார்க்கில் நடக்கும் கதை. ஒரு பெரிய வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின் தீவிரவாதம் தேசம் முழுவதும் உக்கிரம் பெறுகிறது. இன ரீதியான கலவரங்கள் அதிகமாகின்றன. பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் நிலையில், தீவிரமனா இனவெறி கொண்ட அரசியல் தலைவர் மார்டி நோர்டால் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்று கணிக்கப்படுகிறது. 19 வயது ஸக்காரியா ஒரு தீவிரவாத அமைப்பில் இணைகிறான். அங்கி அலி என்பவனுடன் நட்பு ஏற்படுகிறது. புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராகத் திரும்பும் தேசத்தின் தற்போதைய நிலையில் இருவருக்குமே உடன்பாடு இல்லை. அதற்கு எதிராக போராட முடிவெடுக்கின்றனர். ஆனால் இருவருமே அதிகார வர்க்கத்தின் கைப்பாவைகளாகவே இருக்கின்றனர். இவர்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது அவர்களின் சகோதரத்துவம் பாதிக்கப்படுகிறது, அவர்கள் செய்யும் காரியத்தின் விளைவுகள் அவர்களின் வாழ்வை பெருமளவில் பாதிக்கப்போகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.

மாலை 8.00 மணி | TAMANI / TAMANI | DIR: S.MATHAN | MALAYSIA | 2019 | 90'

மலேசியாவில் எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படம் தமணி. 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை எஸ். மதன் இயக்கியுள்ளார். ஒரு சிறுமி திடீரென காணாமல் போனதுகுறித்து வயதானவர் ஒருவர் புகார் அளிக்கிறார். இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிக்கு விசாரணையில் ஒரு தங்க செயின் கிடைக்கிறது. அந்த தங்கச் செயின் குறித்து விசாரிக்கும்போது அடுத்தடுத்து பல்வேறு குற்றங்கள் அந்த செயினை அடிப்படையாக வைத்து நடந்ததிருப்பதும் தெரியவருகிறது. இதை எப்படி அந்த போலீஸ் அதிகாரி கண்டுபிடிக்கிறார் என்பதை மிகுந்த சுவாரஸ்யமாக படமாக்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x