Published : 12 Dec 2019 03:20 PM
Last Updated : 12 Dec 2019 03:20 PM

சென்னை பட விழா | தேவி | டிசம்.13 | படக்குறிப்புகள்

காலை 11.00 மணி | SCENT OF MY DAUGHTER / SCENT OF MY DAUGHTER | DIR: OLGUN OZDEMIR | TURKEY | 2019 | 103'

2016-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்துக்கு நடுவே கனரக சரக்கு லாரியை மோதச் செய்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. அந்த பகுதியின் அழகை ரசிக்க வந்தவர்களுக்கு ஏற்பட்ட கொடூரம். பெற்றோர், கணவர், ஆறு வயது மகளை பறிகொடுத்த பீட்ரைஸ் துருக்கியின் அர்மீனியன் கிராமத்துக்கு தனது உறவினர்களின் சடலத்தை எடுத்துச் செல்ல நடத்தும் போராட்டத்தை விவரிக்கிறது.

பிற்பகல் 2.00 மணி | ALICE / ALICE | DIR: JOSEPHINE MACKERRAS | UK / AUSTRALIA / FRANCE | 2019 | 103'

உலகில் பல பெண்கள் இருப்பதுபோலவே ஆலிஸுக்கு தொடக்கத்தில் நிம்மதியான வாழ்க்கை. ஒரு சரியான மனைவியாகவும், தாயாகவும், தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். வாழ்க்கையில் திடீரென பூகம்பம் கிளம்புகிறது. கணவர் இரட்டை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பது தெரிய வருகிறது. வேறொரு குடும்பத்துடன் வாழும் கணவரை சகிக்க முடியாமல் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவரது வங்கி கணக்கில் இருந்த பணம் முழுவதும் கணவரால் சுரண்டப்பட்டுள்ளது வெளியே வந்த பிறகு தான் தெரிய வருகிறது. வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது? என்ன முடிவெடுப்பது? ஆலிஸ் அடுத்தகட்ட வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பது தான் படத்தின் கதை.

மாலை 4.30 மணி | SYSTEM CRASHER / SYSTEMSPRENGER | DIR: NORA FINGSCHEIDT | GERMANY | 2019 | 118'

9 வயது சிறுமி, மற்றவர்களால் முன்பே கணிக்க முடியாத அளவுக்கு பல்வேறு சமயங்களில் அதீத கோபமுறுகிறாள். இது அவளை சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவளின் இந்த நடவடிக்கையால் தன் தாயால் ஏற்கெனவே குழந்தைகள் காப்பகத்தில் விடப்படுகிறாள். ஆனால், அச்சிறுமிக்கு மீண்டும் தன் தாயிடம் திரும்புவதே நோக்கமாக இருக்கிறது. ஆனால், அவளின் தாயோ தான் பெற்ற மகளைக் கண்டே பயப்படுகிறார். இதனால், தன் மகளின் கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சியாளர் ஒருவரை நியமிக்கிறார். அந்த பயிற்சியாளர் மூலம் புதிய நம்பிக்கை பிறக்கிறது. தன் மனக்குழப்பங்களில் இருந்து அச்சிறுமி மீள்கிறாரா என்பதை 'சிஸ்டம் கிராஷர்' திரைப்படம் உணர்வுப்பூர்வமாக கையாண்டிருக்கிறது..

மாலை 7.00 மணி | A SON / BIK ENEICH: UN FILES | DIR: MEHDI BARSAOUI | TUNISIA, FRANCE, LEBANON, QATAR | 2019 | 95'

மெரீமும் அவரது 10 வயது மகன் அஸிஸும் கும்பல் தாக்குதலில் தற்செயலாக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகிறார்கள். அஸுக்கு கல்லீரலில் காயம் ஏற்படுகிறது. அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்போது மிகப்பெரிய ரகசியம் ஒன்று வெளிப்படுகிறது. தான் இதுவரை தந்தை என எண்ணி வந்த நபர் உயிரியல் ரீதியாக தனது தந்தை இல்லை என்ற விவரம் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது திரைப்படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x