சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.12 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.12 | படக்குறிப்புகள்
Updated on
1 min read

காலை 10.45 மணி | EASY LOVE / EASY LOVE | DIR: TAMER JANDALI | GERMANY | 2019 | 89'

இயக்குநர் தமர் ஜண்டாலியின் பாராரட்டுக்குரிய சோதனை முயற்சி இது.. ஜெர்மனியின் கொலோனில் வாழும் ஏழு ஆண்களையும் பெண்களையும் பின்தொடர்ந்து ஒரு ஆவணப்படத்தைப் போல எடுத்த இயக்குநர் அதை ஒரு புனைகதையாகவும் மாற்றினார். இப்படத்தில் வருபவர்கள் எல்லோருமே உணர்ச்சிப்பூர்வமான பாதுகாப்பு மற்றும் இன்பம் ஆகியவற்றிற்கு இடையில் ஒரு சமநிலையைத் தேடுபவர்கள். கதாபாத்திரங்களின் அச்சம், கனவுகள், கற்பனைகளை யதார்த்தமாக பார்வையாளர்களிடம் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குனர். காதலை விரும்புபவர்களுக்கான படமே ஈசி லவ்.

பகல் 1.00 மணி | SEX WEATHER / SEX WEATHER | DIR: JON GARCIA | USA | 2018 | 89'

சிட்னியும் டாரலும் குறைந்த பட்ஜெட்டில் சுயாதீன திரைப்பட தயாரிப்புப் பணிகளில் ஈடுபடும்போது சந்தித்துக்கொள்கின்றனர். வேலைகளுக்கிடையே அவர்களது நட்பும் வளர்கிறது. இருப்பினும், அவர்களின் பல்வேறு வேலைகள் காரணமாக காதல் ஒருபோதும் மலர வாய்ப்பில்லை. பட வேலைகள் முடிந்ததும் அவரவர் வேலைகளைப் பார்த்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு போஸ்ட் புரடெக்ஷன் பணிகளின்போதும் பிரீமியர் காட்சிக் கொண்டாட்டத்தின்போதும் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போதாவது அவர்கள் தங்கள் மனதில் மறைத்துவைத்திருந்த காதலை வெளிப்படுத்திக்கொண்டார்களா?

பிற்பகல் 3.00 மணி | JUNK LOVE / JUNK LOVE | DIR: PIERRE DE SUZZONI | FRANCE | 2019 | 80'

அழகிய இளம்பெண் சாரா வின்ஸைக் காதலிக்கிறாள். நாட்கள் செல்லச்செல்ல அவள் விரும்பும் அளவுக்கு வின்ஸுக்குத் தன் மீது காதல் இல்லை என்று உணர்கிறாள். வலியுடன் அவனை விட்டுப் பிரிகிறாள். காரணத்தை அறியாத வின்ஸ், மீண்டும் சாராவின் மனதைத் தன் வசப்படுத்த விரும்புகிறான். கால ஓட்டத்தில் ஜேக் என்னும் இளைஞனுடன் காதலில் விழுகிறாள் சாரா. அதுவும் அவள் விரும்பாமலேயே! பீட்சா டெலிவரி செய்யும் ஜேக் எழுத்தாளனாக ஆசைப்படுகிறான். முக்கோணக் காதலாய் நீளும் இக்கதையின் முடிவு என்ன?

மாலை 5.30 மணி: No Screening

மாலை 8.00 மணி: No Screening

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in