

காலை 9.30 மணி | PHOTOGRAPHER / PHOTOGRAPHER | DIR: ZHANG WEI | CHINA | 2018 | 112'
இந்த திரைப்படம் ஷென்சனில் உள்ள மூன்று தலைமுறை மக்களின் தனித்துவமான அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது, அதாவது முதல் தலைமுறையின் நிலைத்தன்மை, சீர்திருத்தம் மற்றும் இரண்டாவது தலைமுறையினரின் மரபுரிமை மற்றும் மூன்றாவது தலைமுறையினரின் புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை அவற்றில் முக்கியமானவை. ஷென்சனில் வசிக்கும் கணவன் மனைவி இருவர் உடல் ஓவியங்களை புகைப்படம் எடுப்பவர்கள். இவர்கள் இருவரும் பிரிய நேரிடுகிறது. பின்னர் சில காலம் கடந்த பிறகு மீண்டும் இணைகிறார்கள். போராட்ட குணமும், சொந்தமாகத் தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருக்கும் மகன், அம்மாவின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து, மொபைல்களுக்கான புகைப்பட செயலியை உருவாக்க முற்படுகிறான்.
பகல் 12.00 மணி | ZERO FLOOR / PILOT | DIR: EBRAHIM EBRAHIMAIAN | IRAN | 2019 | 90'
வாஹித் தனது நான்கு வயது மகன் சோஹீலிக்கு நடைபெற உள்ள அறுவை சிகிச்சையை நிறுத்த தெஹ்ரானுக்கு வருகிறார், ஆனால் அவர் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த மகனைத்தான் காண முடிகிறது.. வாஹித் தனது முன்னாள் மனைவி பாஹிமே தனது சுயநலத்திற்காக எடுத்த முடிவுதான் சோஹீலின் மரணத்திற்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார், வாஹித் மற்றும் பாஹிமே இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குகிறது சோஹீலின் மரணம். அவர்கள் சொல்லாத வார்த்தைகள் அனைத்தும். அங்கு புதிய அர்த்தங்களை தருகிறது.
பிற்பகல் 2.30 மணி | HOLY BOOM / HOLY BOOM | DIR: MARIA LAFI | GREECE | 2018 | 90'
ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை. ஒரே இடத்தில் வசிக்கும் நான்கு அந்நியர்களின் வாழ்க்கை, சட்டவிரோதமாக குடியேறி, ஒரு கார் விபத்தில் இறந்த தனது கணவரின் சடலத்தை கூட அடையாளம் காண தடை விதிக்கப்படுவதால் பிறந்த குழந்தையுடன் தவிக்கும் ஆடியா, தாலியாவும் உள்ளூர் சமூகமும் ஏற்றுக்கொள்ள போராடும் ஐஜே, இருந்த ஒரே மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கும் ஒரே வாய்ப்பை இழந்துநிற்கும் தாலியா என பலவிதமான கதைகள் ஒரு புள்ளியில் இணைகிறது. ஐஜே என்பவன் விளையாட்டுக்காக பக்கத்துவீட்டு தபால்பெட்டியை வெடிக்கவைக்க அது சட்டபூர்வமான விளிம்பில் உயிர்வாழ ஒரு வழியைத் தேடும் அந்நியர்களுக்கு புது வழியைக் காட்டுகிறது.
மாலை 4.30 மணி: No Screening
மாலை 7.15 மணி: No Screening