சென்னை பட விழா | தேவி | டிசம்.12 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | தேவி | டிசம்.12 | படக்குறிப்புகள்
Updated on
1 min read

காலை 11.00 மணி | OH MERCY / ROUBAIX, UNE LUMIERE | DIR: ARNAUD DESPLECHIN | FRANCE | 2019 | 119'

கிறிஸ்துமஸ் இரவில் வடக்கு ஃப்ரான்ஸின் மெட்ரோபாலிட்டன் நகரம் களைகட்டியிருக்கிறது. உள்ளூர் காவல் தலைவர் தாவூத் மற்றும் புதிதாக வேலைக்குச் சேர்ந்த லூயிஸ் இருவரும் நகரத்தைச் சுற்றிவருகின்றனர். கார்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, மேலும் சில வன்முறைகள் நிகழ்ந்தேறி இருக்கின்றன.

அப்போது கொடூரமான முறையில் ஒரு வீட்டில், மூதாட்டி கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். இறந்தவரின் அண்டைவீட்டைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் கைது செய்யப்படுகின்றனர். க்ளாட் மற்றும் மேரி இருவரும் தாங்கள் கொலை செய்யவில்லை என்று கலங்கித் தவிக்கின்றனர். தாவூத் தலைமையில் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. அதன் முடிவில் ஓர் அதிர்ச்சிகரமான உண்மை வெளிவருகிறது...

பிற்பகல் 2.00 மணி | PIRANHAS / LA PARANZA DEI BAMBINI | DIR: CLAUDIO GIOVANNESI | ITALY | 2019 | 105'

இளமை வேகம் மிக்க டீன்ஏஜ் நிக்கோலாவும் அவனது நண்பர்களும் ஆயுதங்களுடன் நகரத்தை சுற்றிவருகிறார்கள். யாரிடமாவது சண்டை என்றால் அவர்களது ஆயுதங்களே பேசும். சானிடா மாவட்டத்தில் அதிகாரத்தை செலுத்த இளம் பருவத்தின் பொறுப்பற்ற தன்மையுடன் அவர்கள் சண்டைகளை அனுபவிக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போல நேசிக்கிறார்கள், அவர்கள் சிறை செல்லவோ அல்லது மரணத்திற்கு அஞ்சவில்லை, எதை எதிர்கொண்டாலும் ஆபத்துடன் விளையாடுவதுதான் அவர்களது உச்சபட்ச முயற்சியாக உள்ளது. எனினும் அவர்களது குற்றச் செயல்கள் விரைவில் அவர்களை மாற்றமுடியாத அன்பு மற்றும் நட்பின் தியாகத்திற்கு இட்டுச் செல்கின்றன.

மாலை 4.30 மணி | No Screening

மாலை 7.00 மணி | No Screening

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in