Published : 10 Dec 2019 05:30 PM
Last Updated : 10 Dec 2019 05:30 PM

சிபிராஜின் 'வால்டர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சிபிராஜ் நடிப்பில் உருவாகி வரும் 'வால்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'வால்டர்'. இதன் படப்பிடிப்பு, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை 11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தொடர்பாக சிங்காரவேலன் விடுத்த எச்சரிக்கையை, சமரசம் பேசி முடிவுக்குக் கொண்டு வந்து படப்பிடிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இதில் சிபிராஜ், சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

முழுக்க காவல்துறை அதிகாரியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x