Published : 10 Dec 2019 09:21 AM
Last Updated : 10 Dec 2019 09:21 AM

திரை விமர்சனம்: தனுசு ராசி நேயர்களே

ஜோதிடம், ஜாதகம் ஆகிய வற்றில் தீவிர நம் பிக்கை கொண்டவர் தனுசு ராசிக்காரரான அர்ஜுன் (ஹரிஷ் கல்யாண்). செவ்வாய் தோஷத்தை நம்பும் அவருக்கும், செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட விஜயாவுக்கும் (டிகங் கனா சூரியவன்ஷி) இடையே ஏடா கூடமான சந்திப்பு நிகழ்கிறது. அதன் தொடர்ச்சியாக அவர்களிடம் காதல் மலர்ந்ததா, அது கல்யாணத்தில் முடிந்ததா என்பது கதை.

திரைக்கதையின் நகர்வைத் தீர்மானிக்கும் நாயகன், அவரது காதலி, அவரது இரண்டாம் காதலி ஆகிய மூன்று முதன்மைக் கதா பாத்திரங்கள் அழுத்தமாகவும், முழுமையாகவும் வடிவமைக்கப் பட்டுள்ளன. இந்த மூன்று கதா பாத்திரங்கள் இடையிலான உறவை வலிமைப்படுத்தவும், திரைக்கதை உருவாக்கும் கேள்வி களுக்கான பதில்களைத் தரு வதற்கும் உருவாக்கப்பட்டுள்ள துணை கதாபாத்திரங்களும் ஈர்க் கிறார்கள்.

நாளிதழில் தினப்பலன் படித்த பின்பே அன்றாட வாழ்க்கையைத் தொடங்கும் அர்ஜுனின் கதா பாத்திரத்துக்கு, ஜோதிடம், ஜாத கக் கட்டங்கள் மீது எப்படி தீவிர நம்பிக்கை உருவானது என்பதை விளக்கும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் நறுக். அதேபோல, பார்த்த மாத் திரத்தில் காதல் வருவதற்கு பதி லாக, பார்த்த மாத்திரத்தில் காமம் வந்துவிடுவது, அதன் பின்னரே காதலிக்கலாமா, வேண்டாமா என்று அர்ஜுனும் விஜயாவும் முடி வெடுப்பது ஆகியவை திரைக்கதை யில் புதிதாக இருக்கின்றன.

குறிப்பாக, மூடநம்பிக்கைக் கும், முற்போக்கு சிந்தனைக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக் காட்டும் ‘முள்ளை முள்ளால் எடுக்கும்’ திரைக்கதை சூத்திரம் நன்கு எடுபடுகிறது.

தன் பிரியத்துக்குரிய காதல னுடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு எளிதாக கிடைத்தபோதும், தன் லட்சியத்தில் உறுதியாக இருக்கும் பெண் கதாபாத்திரம் தமிழுக்கு புதிது. தமிழில் அறிமுகமாகியுள்ள டிகங்கனா சூரியவன்ஷி இந்த வேடத்தில் வசீகரிக்கிறார். ரெபா மோனிகா ஜானுக்கு பெரிய வேலை இல்லை. ஒரு பாடலிலும், சில காட்சிகளிலும் தலைகாட்டிப் போகிறார்.

முற்போக்கு சிந்தனை கொண்ட வராக, அர்ஜுனின் தாய்மாமன் கதா பாத்திரத்தில் வந்து கதையைவிட்டு விலகாமல் கலகலப்பூட்டுகிறார் முனீஸ்காந்த். குணச்சித்திர நடிப் பிலும் போகிற போக்கில் முத்திரை பதித்துச் செல்கிறார். நாயகனின் அம்மாவாக வரும் ரேணுகா, பாதுகாப்பு ஊழியராக வரும் சார்லி ஆகியோரும் கச்சிதமாக நடித்து, கவனிக்க வைக்கிறார்கள். குடும்ப ஜோதிடராக வரும் பாண் டியராஜன் இயல்பு. ஆனால், கட்டியக்காரன் போல படத்தின் போக்கை கதையாக சொன்னபடி வரும் யோகிபாபு கதாபாத்திரம் தேவையற்ற திணிப்பு. பெரிதாக ஈர்க்காத பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு மைனஸ்.

காதல் என்பதற்காகவே உருகிய காலம் போய், லட்சியத்துக்கு குறுக்கே காதல் வந்தால் விலகத் தெரிய வேண்டும் என்பதை உணர்த் திய வகையில் கவனிக்க வைக் கிறார் இயக்குநர் சஞ்சய் பாரதி.

தன்னை நம்பாமல், ஜோதி டத்தை மிகத் தீவிரமாக நம்பித் திரிந்து, வாழ்வின் அபத்தமான தருணங்களை எதிர்கொள்ளும் இந்த தனுசு ராசிக்காரர், நமக்கு மத் தியில் நடமாடும் கதாபாத்திரங் களில் ஒன்று என்பதால் நெருக்க மாக ரசிக்க வைக்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x