Published : 09 Dec 2019 07:42 PM
Last Updated : 09 Dec 2019 07:42 PM

தன்னைக் குறித்துப் பரவும் வதந்தி: இந்துஜா வேதனை

தான் கதைகள் கேட்பது குறித்து வெளியான வதந்திக்கு, நடிகை இந்துஜா வேதனை தெரிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த 'பிகில்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் இந்துஜா. ஏஜிஎஸ் நிறுவனம் இந்தப் படம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்துஜாவைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க பல்வேறு இயக்குநர்கள் கதை சொல்லி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் இந்துஜா கமர்ஷியல் படங்களை மட்டுமே விரும்புவதாகவும், விருதுகள் வாங்கும் படங்களில் நடிக்க பல்வேறு நடிகைகள் இருப்பதாகக் கூறுவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்தச் செய்திக்குப் பதிலளிக்கும் விதமாக இந்துஜா, "ஊடகங்கள் வலிமைமிக்கவை. சினிமாவின் முதுகெலும்பு என நான் நம்புகிறேன். அப்பாவி மக்கள் ஊடகங்கள் காட்டுவதை, அப்படியே பார்த்து, கேட்டு நம்பிவிடுகிறார்கள்.

(அதனால்) பேருக்கு எழுதாதீர்கள். நான் சினிமாவின் மீது அதிக காதல் உள்ள நபர். நீங்கள் சொன்னது போல மோசமான ஒரு விஷயத்தை நான் சொல்லவே மாட்டேன். வார்த்தைகள் அதிகம் காயப்படுத்தும்" என்று தெரிவித்துள்ளார் இந்துஜா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x