Published : 07 Dec 2019 01:01 PM
Last Updated : 07 Dec 2019 01:01 PM
'இந்தியன் 2' படத்தின் போஸ்டர் ஒன்று இணையத்தில் சர்ச்சையானதால், தயாரிப்பு நிறுவனமான லைகா விளக்கம் அளித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் படம் 'இந்தியன் 2'. காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கமல் ஓய்வில் இருப்பதால், படப்பிடிப்புக்குக் கொஞ்சம் இடைவெளி விடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்றே, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுவிட்டது படக்குழு. அதில் கமலின் லுக் படத்தில் எப்படியிருக்கும் என்பதைக் காட்டிவிட்டது படக்குழு. மேலும், இதுவரை சுமார் 5 போஸ்டர்கள் வரை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு 'இந்தியன் 2' படத்தின் புதிய போஸ்டர் என்ற தலைப்பில் பலரும் போஸ்டரைப் பகிர்ந்தார்கள். அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. என்னவென்றால் கமல் உட்கார்ந்திருப்பது பின்புறம், 1.76 லட்சம் கோடி என்பது எண்ணில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தொகை என்பதால், இந்தப் படம் அந்த மோசடியின் பின்னணி என்றெல்லாம் பதிவுகளைக் காண முடிந்தது. பெரிய விவாதமாக உருவாகும் முன்பு முடிக்க வேண்டும் என்று நினைத்து லைகா நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் "இந்த 'இந்தியன் 2' போஸ்டர் அதிகாரபூர்வமானது அல்ல. தயாரிப்பு நிறுவனமோ, இயக்குநரோ அவரது குழுவோ இதை உருவாக்கவில்லை" என்று முற்றுப்புள்ளி வைத்தது.
காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கமலுடன் 'இந்தியன் 2'-வில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ரத்னவேல் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
This poster of #Indian2 circulating online is not an official one!
— Lyca Productions (@LycaProductions) December 5, 2019
Neither the production house nor the director & team is involved in this! pic.twitter.com/ebkqS1r8hq
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT