Published : 07 Dec 2019 11:09 AM
Last Updated : 07 Dec 2019 11:09 AM

உலக அளவில் 7-வது இடம், இந்திய அளவில் முதலிடம்: 'ரவுடி பேபி' பாடல் சாதனை

'மாரி 2' படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் உலக அளவிலும், இந்திய அளவிலும் 2019-ம் ஆண்டில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

தனுஷ் - அனிருத் கூட்டணியில் உருவான 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் யூ டியூப் சேனலில் பல சாதனைகளைப் படைத்தது. அவற்றை தனுஷ் - யுவன் கூட்டணியில் உருவான 'ரவுடி பேபி' பாடல் முறியடித்தது.

'மாரி 2' படத்தில் இடம்பெற்ற அப்பாடலில், தனுஷ் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடனமாடியுள்ளனர். பிரபுதேவா நடனம் அமைத்த இப்பாடலுக்கு சமூக வலைதளங்களில் பலரும் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.

2018-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் 'மாரி 2' வெளியானாலும், 2019-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி தான் யூ டியூப் சேனலில் 'ரவுடி பேபி' பாடல் வீடியோ வடிவில் பதிவேற்றப்பட்டது. அன்றைய தினத்திலிருந்தே வைரலாகப் பரவத் தொடங்கியது.

தற்போது வரை ய டியூப் சேனலில் ’ரவுடி பேபி’ பாடல் சுமார் 715 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. யூ டியூப் நிறுவனம் 2019-ம் ஆண்டு அதிகம் பேர் பார்த்த வீடியோக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் 2019-ம் ஆண்டில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்கள் பட்டியலில் முதலிடத்தில் 'ரவுடி பேபி' பாடல் இடம் பெற்றுள்ளது.

மேலும், பில்போர்ட் யூ டியூப் பட்டியலில் உலக அளவில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்கள் பட்டியலில் 7-ம் இடத்தைப் பிடித்துள்ளது 'ரவுடி பேபி' பாடல். இந்த மாபெரும் சாதனைக்குப் படக்குழுவினர் அனைவருமே நன்றி தெரிவித்துள்ளனர்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x