Published : 02 Dec 2019 06:58 PM
Last Updated : 02 Dec 2019 06:58 PM

ராஜுமுருகனின் 'ஜிப்ஸி' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'ஜிப்ஸி' படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களைத் தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. ஜீவா நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. ஆனால், தணிக்கையில் பல்வேறு காட்சிகள் நீக்கப்பட்டன. இறுதியாக TRIBUNAL-லிலும் தணிக்கை மறுக்கப்பட்டது. இறுதியில் தணிக்கைக்குத் தகுந்தாற் போல் சில காட்சிகளை நீக்கி, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். அப்போது 'ஏ' சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு.

'ஜிப்ஸி' தணிக்கை செய்யப்பட்டாலும், படம் வெளியீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை தொடங்கியது. டிசம்பரில் தொடர்ச்சியாக பல்வேறு படங்கள் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பதால், ஜனவரி 24-ம் தேதி 'ஜிப்ஸி' வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

'ஜிப்ஸி' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் இயக்குநர் ராஜுமுருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x